தேவன் தமது வார்த்தையைப் பற்றின் சிந்தையை எப்பொழுதாவது மாற்றுவாரா? Does GOD EVER CHANGE His MIND ABOUT His Word ஏப்ரல் 18, 1965 பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. நாம் நமது தலைகளை வணங்குவோம். அருமையான ஆண்டவராகிய இயேசுவே, தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை எங்கள் மேல் ஊற்றப்பட்டு எங்கள் ஸ்தானத்தையும், இடத்தையும், எங்கள் கடமைகளையும் நாங்கள் அடையாளம் கண்டு, உலகத்திலிருந்து வேறுபிரிந்து, தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட மக்களாய் நாங்கள் அழைக்கப்பட, ஒரு மகத்தான எதிர்ப்பார்க்குதலுடன் மறுபடி யுமாக உமது நாமத்தினாலே நாங்கள் கூடியுள்ளோம். இதை அருளும் கர்த்தாவே, இன்றிரவு தேவாசீர்வாதங்கள் தாமே நாங்கள் செய்யப் போகும், அல்லது கூறப்போகும் எங்களை வழிநடத்தி வழிகாட்டட்டும், அதுதாமே உமது நாமத்திற்கே கனத்தையும் மகிமையும் கொண்டு வரட்டும். ஆமென். 2. நான் இன்றிரவு சபைக்கு மறுபடியும் வந்து அருமையான மக்களாகிய உங்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கு வெப்பமாயுள்ளதென்று நான் அறிவேன். நான் என் மனைவியை தொலைபேசியில் அழைத்தேன். அங்கு வெப்பமானது 95 அல்லது 96 அல்லது அதற்கு மேலிருக்கும் என்று எண்ணுகிறேன். இங்குள்ளதைக் காட்டிலும் அங்கு வெப்பம் அதிகம், ஆதலால் வெப்பமான சூழ்நிலையில் இருக்க நான் இப்பொழுது பழகிவிட்டேன். இந்த அருமை யான ஈஸ்டர் வேளையில் இக்கூடாரத்தில் இருப்பதற்கு நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். 3. இன்று காலை நான் அளித்த நீண்ட செய்திக்காக மன் னிப்பு கேட்கிறேன் என்று என்னால் கூற இயலவில்லை. ஆனால் நான்.. உங்கள் பொறுமையை இழக்க வைத்து பின்னர் இன்றிரவுக் கூட்டத்திற்கு உங்களை வரவழைக்க நான் விரும்பவில்லை. இந்த உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற இந்தச் செய்தியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும் பினேன். பாருங்கள்? நீங்கள் அதைக் குறித்து கவலையுற வேண்டாம், பாருங்கள். அதன்பேரில் களிகூறுங்கள்! எதுவுமே உங்களை அதி னின்று பிரிக்க முடியாது; ஏனென்றால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் என்றென்றுமாக இருக்க நீங்கள் கொள்ளப்பட்டுள்ளீர்கள். தேவன் தம்முடைய முத்திரையை உங்கள் மேல் பதித்துவிட்டப் பிறகு, நீங்கள் சேருமிடத்தை அடைந்துவிட்டீர்கள். 4. மூட்டையின் மீது (அரசாங்கம் தன் முத்திரையை (Seal) பதித்தபிறகு, ரயில்வே நிர்வாகம் கதவின் மீது முத்திரை (Seal) இடுகிறது. ஆகவே அப்பெட்டியானது அது சேருமிடத்தை அடையும் வரை திறக்கப்பட முடியாது. தேவன் தம் முத்திரையாகிய பரிசுத்த ஆவியை ஒரு மனிதனின்மீது பதித்துவிட்ட பிறகு அவன் தன் நித்திய இடத்தை அடைந்து விட்டான். மறுபடியுமாக அவனால் எப்போதும் பின்வாங்க முடியாது. ''அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தா திருங்கள்'' என்று எபேசியர் 4:30 உரைப்பதை நினைவில் கொள்ளுங் கள். நீங்கள் என்றென்றுமாக, நித்தியமாக தேவனுடைய இராஜ்ஜியத் தில் இருப்பதற்கென்று நீங்கள் பரிசுத்த ஆவியினால் அதற்குள் முத்திரை யிடப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது அதைக் குறித்து சிந்தியுங்கள். 5. பிறகு பிசாசானவன் உங்களுக்கு நேராக வந்து உங்க ளிடம் எல்லாவற்றையும் கூறி, உங்களைக் குற்றப்படுத்த முயல்வான். நீங்கள் அவ்விதம் இருக்க முடியாது என்று உங்கள் சிந்தனையைத் தூண்டுவான். ஆனால் அவனுக்குச் செவிகொடாதீர்கள். 6. மரணத்தைக் கடந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்கள் என்றும், முன்பு நேசித்தவைகளை இப்பொழுது நேசிப்பதில்லை என்றும் நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தேவன் நம் முடைய மத்தியில் மகத்தான கிரியைகள் நடப்பித்ததை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அது இருக்கிறேன் என்ற மகத்தான தேவன்தான் என்று நிச்சயமான சாட்சிகள் உண்டு. அவர் நாமத்தினால் தீர்க்க தரிசனமாய் உரைக்கப்பட்டவை எல்லாம் உரைக்கப்பட்டவிதமாகவே அப்படியே நிறைவேறினதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். விஞ் ஞானம், செய்தித்தாள், படம், புகைப்படக் கருவி, எழுத்தாளர்கள், மற்ற எல்லாரும் இதை அடையாளங் கண்டுகொள்ள வேண்டியதாயிருந்தது. பாருங்கள். அது தேவையாயிருந்தாலும் அல்லது தேவை இல்லா விட்டாலும் சரி, தேவன் அவைகளை நடப்பிக்கச் செய்வார். அதை அறி யச் செய்வார். எப்படியிருந்தாலும் சரி, பாருங்கள். 7. அவர் பெரிய குழுவாக இருப்பவர்களுக்காக வருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது சிறிய குழுவாக இருப்பதனால், ''பயப்படாதே சிறு மந்தையே, உங்கள் பிதாவின் சித் தம்...'' பாருங்கள்? 8. இந்த ஊழியக்காரரை அபிஷேகம் செய்வதற்கு முன்பு உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு வார்த்தையைக் கூற விரும்புகிறேன். இதை நீங்கள் அறியவேண்டும். இது மிகவும் அதிர்ச்சியூட்டுவதா யிருக்கிறது. இது சரியான ஒரு எண்ணிக்கையாயிருக்கும் என்று நான் கூற எண்ணவில்லை. அதை நான் உங்களிடமே விட்டுவிடுகின்றேன். 9. இங்கு யாராவது மிருகங்கள் செயற்கை முறையாக கருவூட்டப்படுவதைக் கண்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அதை நான் அங்கீகரிப்பதில்லை. ஆனால் அதை நான் கண்டிருக்கிறேன். ஒரு சிறிய குச்சியில் ஆண் மிருகத்தினுடைய விந்தைத் தொட்டு எடுத்து ஒரு சலவைக் கல்லின் மேல் தடவி, அந்த ஒரு சொட்டு விந்தை ஒரு பூதக் கண்ணாடியின் மூலமாக நோக்கினால், (சாதாரணமாக அதைக் காண முடியாது) அந்த ஒரு சொட்டில் 50 அல்லது 100 அணுக்கள் குதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல பெண்ணுக்குள் அநேக முட்டைகள் உண்டு, இப்பொழுது இந்த முதல் இரண்டும் ஒன்றுக் கொன்று இணையும்போது.... 10. அந்த லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்றுதான் உயிர் வாழப்போகின்றது. இதைக் குறித்து எப்போதாவது சிந்தித்திருக் கிறீர்களா? இவை அதே விந்தணுக்களும் அதே முட்டைகளும் தான், எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒன்றே ஒன்றுதான் வாழப் போகின்றது. எது முன்னே சென்றடையும் என்றல்ல. ஏனென் றால் சிலசமயம் முட்டையானது, பின்னே செல்லும், அணுவானது விந் துக்களின் நடுவில் சென்றுவிடும், ஒன்றுக்கு மேல் ஒன்று அசைந்துக் கொண்டிருக்கும். ஆனால் பிறக்கப்போவது ஆண் அல்லது பெண்ணா, சிகப்பு அல்லது கறுப்புத் தலையையுடையதா, அல்லது மற்றவை என்று அறிய ஒரு அறிவுத் திறன் தேவையாயிருக்கிறது. அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது. அது வேறொன்றாக இருக்க முடியாது. தெரிந்து கொள்ளுதல்! 11. இயற்கையான பிறப்பிலும் அது தெரிந்து கொள்ளுதலாய் இருக்கின்றது. அது ஆணாய் அல்லது பெண்ணாயிருந்தாலும் சரி, அது என்னவாயிருந்தாலும் சரி. அந்த சிறு விந்தணுவானது அந்த சிறிய முட்டையினுள் ஊர்ந்துச் செல்லும்போது அடிப்பாகம் வளரத் துவங்கும். பின்னர் குழந்தையின் முதுகுத் தண்டு வளரும். மிருகம் அல்லது வேறெதுவாயிருந்தாலும் சரி. ஆனால் மற்ற லட்சக்கணக்கான அணுக் கள். லட்சக்கணக்கான முட்டைகள், லட்சக்கணக்கான விந்தணுக்கள், அதில் ஒன்றுதான் உயிர் வாழ்கின்றது. எல்லாமே ஒன்றுதான். ஆனால் அது வாழவேண்டும் என்று தேவன் தெரிந்து கொள்கிறார். மற்றவை யெல்லாம் அழிந்துபோகும். பத்து லட்சத்தில் ஒன்று. 12. எகிப்தை விட்டு வெளியே வந்த இஸ்ரவேலர் எல்லாரும் ஒரே தீர்க்கதரிசியின் செய்தியைத்தான் விசுவாசித்தார்கள். ஒவ்வொரு வரும் தேவன் மோசேயின் மூலம் செய்த அடையாளங்களைக் கண்டனர். எகிப்தை விட்டு வெளியே வந்த ஒவ்வொருவரும் சிவந்த சமுத்திரத்தி னூடாகக் கடந்து மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் கள். மோசே ஆவியினால் பாடினபோதும் மிரியாம் தம்பூரோடும் வாசித்து மேலும் கீழும் கரையில் ஓடினபோது தேவ வல்லமை வந்ததை ஒவ்வொருவரும் கண்டனர். ஒவ்வொரு இரவிலும் வானத்திலிருந்து பெய்த புதிய மன்னாவை ஒவ்வொருவரும் சாப்பிட்டனர். அடிக்கப்பட்ட கன்மலையின் தண்ணீரை ஒவ்வொருவரும் குடித்தனர். எகிப்தை விட்டு இருபது லட்சம் பேர் வெளியே வந்தனர். ஆனால் எத்தனை பேர் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர்? இரண்டு பேர். பத்து லட்சத்தில் ஒருவர்! மற்றவர்களெல்லாம் எங்கே? இயேசு அவர்கள் மரித்தார்கள் என்று கூறினார். "உங்கள் பிதாக்கள் முப்பது வருட இடை வெளியில், வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தும், அவர்கள் எல்லோரும் மரித்தார்கள் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்,'' என்றார். 13. இன்றிரவு இவ்வுலகத்தில் கத்தோலிக்கர், பிராடெஸ்டண் டுகள் உட்பட ஐம்பது கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். இயேசு இப் பொழுது அந்த எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று வந்தாரானால் நான் இப்போது கூறினபடியே இன்றிரவு 500 பேர் காணாமல் போகலாம். 14. ஓ, கிறிஸ்தவர்களே, நாம் நம்மை கிறிஸ்துவினுடைய கவசத்தோடு பிணைத்துக் கொள்வோம். அவரில் அன்புகூர்ந்து அவரைப் பணிந்து நமக்கு தெரிந்ததையெல்லாம் அவருக்குச் செய்து அந்த மகத் தான சமயத்திற்காக காத்திருப்போம். 15. ஒரு சந்ததியிலிருந்து திரளான லட்சக்கணக்கான மக்கள் வெளிவந்து அணிவகுத்துச் செல்லப் போவதில்லை. அது முடியவே முடியாது. ஒவ்வொரு நாளும் ஒரு சந்ததியை முற்றுப் பெறச் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 'நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். அன்று ஜலத் தினால் எட்டு ஆத்துமாக்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு நாளிலும் யாராவது ஒருவருக்கு நாற்பது வருடங்கள் முடி கின்றது பாருங்கள்? ஒவ்வொரு நாளும் அனேகர் தேவனுடைய இராஜ்ஜியத்தில் முத்தரிக்கப்படுகின்றனர். ஒரு நாளிலே அந்த கடைசி நாள் வரும். நாம் இப்போது சரியான மனநிலையில் இருக்கும்போதே நிச்சயமுடையவர்களாய் இருப்போம். சபையிலே, மக்கள் மத்தியிலே, பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் தம்மைத்தாமே அடையாளங் காண்பித்து ஒருமுகப்படுத்துகிறார். ஆதலால் எல்லாம் சரியாயிருக்கிறது என்று நிச்சயித்து அவருக்கு முன்பாக சரியாயிருப்போம். 16. உயிர்ப்பிக்கும் வல்லமையானது உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து வேறுபிரித்து, தேவனுடைய இராஜ்ஜியத்தில் சேர்க்கும் வரை இரவும் பகலும் ஓயாமல் அதைத் தொடருங்கள். ஒரு போதும் நில்லாதேயுங்கள். உண்மையாகவே தேவனுடைய இராஜ் ஜியத்தில் கொண்டு வரப்பட்டு, தேவனுடைய ஆவியால் உயிர்ப்பிக்கப்பட்டிருப்பவர்களே, உங்களுக்கு அது எப்படிப்பட்ட ஒரு சந்தோஷம்! நாம் இரவும் பகலும் முழங்காலில் நின்று ஆனந்தக் கண்ணீர் வடித்து தேவன் செய்த எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்த வேண்டும். 17. இன்றிரவு ஆராதனையில் ஒரு சிறிய மாறுதல் இருக்கும். இன்றிரவு நமது மத்தியில் சகோ. காப்ஸ் என்னும் அருமையான சகோ தரன் உள்ளார். அவர் நசரீன் சபையிலிருந்து நம்மிடம் வந்திருக்கிறார். அது சரி சகோ. காப்ஸ் அவர்களே? அவர் மீது கரங்களை வைத்து இன்று அபிஷேகிக்கப்பட அவர் விரும்புகிறார். 18. மற்றவர்களுக்கு காண்பிக்க நம்மிடம் அறிமுகச் சான்று கடிதங்கள் கிடையாது. ஆனால் நாம்... நம்மிடம் கடிதங்கள் இருக்க லாம். ஆனால், ஒரு உண்மையான அபிஷேகிக்கப்பட்ட ஊழியக்கார னின் சான்று கடிதங்கள் பரலோகத்தில் உள்ளன என்று நாம் விசுவாசிக் கிறோம். பாருங்கள்? அவனுடைய ஜீவியமானது வேதத்தோடு ஒத் துள்ளது என்று தேவனுடைய உறுதிப்படுத்துதல் அவனிடம் இருக்கும் வரை, வேதத்தை பிரசங்கிக்க அவனுக்கு உரிமையுண்டு. இதுதான் அவனுடைய அறிமுகச் சான்று கடிதம் (credentials) என்ற விசுவாசிக் கிறோம். 19. சகோ. காப்ஸ் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக நசரீன் சபையில் அபிஷேகிக்கப்பட்டவர். ஆனால் இன்றிரவு இச்செய்தியைக் கொண்டு செல்ல மூப்பர்களும் மற்றவர்களும் தன் மேல் கை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். என்ன ஒரு வீரமான செயல்! 20. நான் நிஸ்ஸானிற்கு வந்தது முதல் சகோ. காப்ஸ் வெளிச்சத்தை உயர்த்திப் பிடிக்கும் சகோ. நெவிலுக்கு எப்படி உதவு கிறார் என்றும், இவர்கள் இருவரும் எப்படி வீரமாக இவ்வெளிச்சத் தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் போன்ற மகிழ்ச்சிகரமான தகவல் களைப் பெற்று வருகிறேன். சகோ. நெவில் மீது நாம் கரங்களை வைத்துள் ளோம். ஆனால் சகோ. காப்ஸ் மீது இன்னும் கரங்களை வைக்கவில்லை. இங்குள்ள ஊழியக்காரர்கள் அனைவரும் சகோ. ஜாக்சன், சகோ. ரட்டல் மற்றும் சபையின் மூப்பர்கள் யாவரும் இங்கு சில நிமிடங்கள் வந்து சகோ. காப்ஸ் மீது கரங்களை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் பிறகு... 21. இப்பொழுது நாம், வேதத்தில் அவ்வாறே செய்தார்கள் என்றும் அவர்கள்மேல் கரங்களை வைத்து ஊழியத்திற்கென்று வேறு பிரித்தார்கள் என்றும் நாம் பார்க்கிறோம். "அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்...'' என்று தீமோத்தேயு கூறுகிறது. அந்த மனிதனுக்குள் அந்த வரம் இருந்ததை அவர்கள் அறிந்து கொண் டார்கள். அதனால் சங்கத்தார் அவன் மீது கரங்களை வைக்கும்படி அவனிடம் வந்தார்கள். 22. இப்பொழுது, பின்மாரி மழை பிரிவைச் சேர்ந்த சகோதரர்கள், அதைக் கலப்பாக்கினர். இவ்வாறு செய்யும்போது அம்மனிதனுக்கு அவர்கள் ஒரு வரத்தை அளிப்பதாக எண்ணுகின்றனர். அப்படி இல்லவே இல்லை. வரமானது அவனுக்குள் ஏற்கெனவே உள்ளது. தேவன் அவனுக்குள் அந்த வரத்தை வைத்திருக்கிறார் என்று அவர்கள் விசுவாசித்து, தங்கள் கரங்களை அவன்மீது வைத்து ஒப்புதலுறுதி அளித்தனர். 23. தங்கள் ஆத்துமாக்களில் அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுள்ள இச்சபையிலுள்ள இம் மக்கள் (நான் அவ்வாறே விசுவாசிக்கிறேன்) சகோ. ரட்டல், சபையிலுள்ள மற்ற மூப்பர்கள், கிளை சபையிலுள்ளவர்கள், இங்கு வந்து சகோ. காப்ஸ் மீது கரங்களை வைத்து இச்சபை மக்கள் முன்னிலையில், இயேசு எங்கு அழைக்கின்றாரோ அங்கெல்லாம் சென்று இயேசுகிறிஸ்துவினுடைய சுவிஷேசத்தை பிரசங்கிக்க நாம் அபிஷேகித்து ஒப்புதலுறுதியை அளிப்போம். அவர்... ஏற்கெனவே பிறப்பின் மூலம் இவர் நம்மில் ஒருவர், இவர் செய்தியை விசுவாசித்ததால் நம்மிலொருவராய் இருக்கின்றார் -சத்தியத்திற்காக நிற்பதால் நம்மில் ஒருவராய் சகோ. காப்ஸ் இருக்கின்றபடியால் உங்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கரங்கள் வைக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட நாம் விரும்புகிறோம். சரி, சகோ. ரட்டல், சகோ. காப்ஸ், சகோ. நெவில், சகோ. ஜாக்சன், இன்னும் அநேக ஊழியக்காரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. அவர்கள் இன்றிரவு தங்கள் சொந்த ஆராதனையில் இருக் கிறார்கள் என்று நான் யூகிக்கின்றேன். சகோ. காப்ஸ் முன்பாக வரவும். நியூயார்க்கிலிருந்து வந்துள்ள சகோ. ஹண்டர், சகோ. அந்தோணி எங்கே? அவர்கள் திரும்பி விட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். (சகோ. நெவில், சகோ. அந்தோணி பின்னால் இருக்கிறார் என்று கூறுகிறார் - ஆசி). அங்கு இருக்கும் நீங்கள், எங்களோடிருப்பவர்கள். சகோ. காப்ஸை அங்கிகரிக்க இங்கு வந்து எங்களுடன் நிற்பது நலமாயிருக்கும் அல்லவா? இங்கிருப்பவர்கள் எத்தனைப் பேர் சகோ. காப்ஸை அறிந்தவர்கள், கரங்களை உயர்த்துங்கள். கரங்களை கீழே வையுங்கள். இவர் தேவனுடைய ஊழியர் என்று விசுவாசிப்பவர்கள் கரங்களை உயர்த்துங்கள். (சபையோர் ஆமென் என்கின்றனர்-ஆசி) நமது சகோதரனாக இவரை நேசிக்கிறோம். 24. இப்பொழுது அபிஷேகம் செய்யப்படுதல் என்று நாம் அழைக்கின்ற, நாம் கையாளும் இவ்வழி முற்றிலும் சரியானதல்ல, நான் இக்கூட்டத்தார்.... நான் இப்பாட்டைப் பாடுவேன். ஆனால் நான் பாட நீங்கள் எனக்கு உதவவேண்டும் என விரும்புகிறேன். 25. ஒரு நாள் ஆலயத்தினினுள்ள பீடத்தண்டையில் ஒரு தீர்க்கதரிசி சென்றான். அவன் ஆலயத்தினுள் இருக்கையில்... அவன் ஒரு நல்ல மனிதனாக, உசியா ராஜாவினுடைய கரங்களைப் பிடித்து அணைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனாக இருந்தான். ஆனால் ஒரு நாள் அவன் ஆலயத்திலிருந்தபொழுது அவன் முன்பு எப்பொழுதும் கண்டிராதவகையில் ஒரு தரிசனத்தில் ஆழ்ந்தான். அத்தரிசனத்தில் தூதர்கள் தங்கள் செட்டைகளோடு முன்னும் பின்னுமாக பறந்து "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'! என்று கூப் பிட்டதைக் கண்டான். ஆம் சகோதரனே பாருங்கள்? "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!'' பென்.. பாருங்கள்? 26. அவ்வாறு கூப்பிட்டபோது ஆலயத்தின் வாசல்களின் நிலைகள் அசைந்தது. அப்போது அவன் "ஐயோ! அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்'' என்று கதறினான். அவன் தேவ னுடைய பிரசன்னத்தில் நின்றபோதுதான் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தாலும் தவறு செய்தவனாய் இருந்தான் என்பதை உணர்ந்தான். "நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங் களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்'' என்று கூறினான். 27. அப்பொழுது தூதர்களில் ஒருவன் பறந்து ஒரு நெருப்புத் தழலை எடுத்து அவன் வாயைத் தொட்டு, "மனுஷக்குமாரனே தீர்க்கதரிசனம் உரை”! என்று கூறினான். சகோதரியே, உங்களால் முடியு மானால் இப்பாட்டிற்கு ஏற்ற சுருதியை இசைப்பீர்களா, எத்தனைப் பேர் இப்பாட்டை அறிவீர்கள்? ஒரு அடி பாடுவோம். அது சரி. ஒரு நெருப்புத் தழல் தீர்ர்ககதரிசியைத் தொட்டது, எவ்வளவு சுத்தமாக்க முடியுமோ அவ்வளவு சுத்தமாக்கிற்று, (யோர் நமது காரியமாய் போவான்", என்று கேட்ட ஆண்டவரின் சத்தத்திற்கு "இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்று பதிலையுரைத்தான். (ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி)... பேசும் என் ஆண்டவரே பேசும், நான் உடனே பதிலுரைப்பேன்; பேசும், என் ஆண்டவரே, பேசும், என் ஆண்டவரே, பேசும், ""என்னை அனுப்பும்" என்று பதிலுரைப்பேன். பாவத்திலும் தகவுக்கேதுவான நடக்கையிலும், இலட்சக் கணக்கானோர் இப்போது மரிக்கின்றனர்; அவர்களுடைய துயரார்ந்த இன்னலானக் கூக்குரலைக் கேளும்; பதற்றங்கொள், சகோதரனே, அவர்களைக் காக்க பதற்றங்கொள் ''எஜமானே, இதோ இருக்கிறேன்'' என்று பதிலளி. பேசும் என் ஆண்டவரே, பேசும், என் ஆண்டவரே, பேசும் நான் உடனே பதிலுரைப்பேன், பேசும், என் ஆண்டவரே, பேசும், என் ஆண்டவரே, பேசும், ""என்னை அனுப்பும் என்று பதிலுரைப்பேன். மூப்பர்கள் இப்பொழுது சகோ. காப்ஸ் மீது கரங்களை வைப் பார்களாக. எல்லாரும் தலைகளை வணங்குவோம். 28. அன்புள்ள ஆண்டவரே, உயிர்ப்பிக்கும் ஆவியின் ஜீவ னானது எங்கள் சகோதரனுக்குள் கிரியைச் செய்வதைக் காண்கையில் ஆலயத்தின் வாசல்கள் மறுபடியும் அசைந்துள்ளன. இது உன்னதத்தி லிருந்து வந்துள்ளது என்று உணர்ந்து, நான் செல்ல வேண்டும் என்று இவர் கூறுகையில் நான் ஜெபிக்கிறேன் ஆண்டவரே. கர்த்தாவே மூப்பர்களாகிய நாங்கள் இவர் மேல் கரங்களை, ஐக்கியத்தின் வலது கரத்தை வைத்து கர்த்தருடைய ஆசீர்வாதங்களை இவருக்குள் அனுப்பு கிறோம். நீர் தாம் இவருடைய வாயையும், இவருடைய எல்லா சிந்தை யையும், இவருடைய எல்லாவற்றையும் அபிஷேகம் செய்யும். இவர்தாமே இச்சுவிசேஷத்தின் செய்தியை நீர் அழைக்கும் எல்லா மூலை முடுக்குகளிலும் எடுத்துச் செல்லட்டும். இதை அறியும் கர்த்தாவே. எங்கள் சகோதரனை, உமக்கு ஊழியனாயிருக்கும்படியாக இயேசுக் கிறிஸ்துவின் நாமத்திலே உம்மிடம் ஒப்புவிக்கிறோம். ஆமென். 29. என் வாலிப சகோதரனே, 'வார்த்தையைப் பிரசங்கி'' ''சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு புத்தி சொல்லு.'' சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. 30. (சகோ. பென் பிரையான்ட் ''சகோ. பிரான்ஹாம், நீரும் மற்றவரும் என் மீது கரங்களை வைத்து அபிஷேகம் செய்வீர்களா? நான் அவ்வாறு விரும்புகிறேன்'' என்று கூறுகிறார் - ஆசி) நீங்கள் இன்னமும் அபிஷேகிக்கப்படவில்லையா? சகோ. பென் இங்கு வந்துள்ளார். சில காலமாய் இவர் பிரசங்கித்து வருகின்றார் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் இன்னுமாய் இவர் அதிகாரப்பூர்வமாக அபிஷேகிக்கப்பட வில்லை, அல்லது கரங்கள் வைக்கப்படவில்லை. (அவர் அபிஷேகம் பண்ணப்பட்டார் என்று நான் நினைத்தேன். அதனால்தான் அவரை இங்கே அழைத்தேன்). 31. சகோ.பென் அவர்களின் மனைவி இங்கு எங்கோ உள் ளார்கள். அவர்கள் மிகவும் அருமையானவர்கள். அவர்கள் ஒரு பெண் பிரசங்கி. நமது அருமை சகோதரனும் அவர்களும் விவாகத்தில் இணைக் கப்பட்ட பிறகு அவர்களை கூடாரத்திற்கு அழைத்து வந்தார், அருமை யான தோற்றத்தையுடைய பெண்மணி, ஆனால் வார்த்தையைக் கண்டு, கேட்டு, ஒரு ஸ்திரீ பிரசங்கம் செய்வது தவறு என்றறிந்து அதைப் புறம்பேதள்ளி; தன் கணவனைச் சார்ந்துக்கொண்டார்கள். அதுதான் சரி, சுவிசேஷத்திற்குகந்த ஒரு செயல். அது அவ்வாறேதான் இருத்தல் வேண்டும். 32. நான் அறிந்துள்ளபடி சகோ. பென் தன் மனைவியோடும் கூட இந்த ஒலி நாடாக்களை தூரமான இடங்களுக்கு, மலைகளில் அமைந்துள்ள பிரதேசங்களுக்கு, காட்டு பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்று அவைகளை இயக்கிக் காண்பித்து அதன் பேரில் பிரசங்கம் செய்கின்றார். அனேக முறை அவர்கள் விரட்டப்பட்டு, புறம்பே தள்ளப் பட்டு, தூக்கி எறியப்பட்டுள்ளனர். அது நாம் எதிர்ப்பார்க்கும் ஒன்று. “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதா யிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.'' 33. எத்தனைபேர் சகோ. பென்னை அறிவீர்கள்? இவர் தேவ னுடைய ஊழியன் என்று எத்தனைப்பேர் விசுவாசிக்கின்றீர்கள், (சபையார் "ஆமென்'' என்கிறார்கள்- ஆசி) பாருங்கள், இவர் நமக்கு அந்நியர் அல்ல. அநேக வருடங்களாக நம் மத்தியில் இவர் இருந்து வருகின்றார். தாழ்மையுள்ள ஒரு மனிதனாக இவரை நான் அறிவேன். இவர் என்னைப் போல அநேக தவறுகளை செய் துள்ளார். நாம் அனைவரும் தவறு செய்கிறோம். சகோ. பென்னிடம் உள்ள எனக்கு பிடித்த ஒரு காரியம் ஒன்று என்னவென்றால் அதைச் சரி செய்ய முழங்காலில் ஊர்ந்துக் கொண்டிருக்க விரும்புவது தான். பிறகு ஒரு நாள் இவர் விவாகமும் விவாகரத்தும் செய்தியைக் கேட்டபோது இவரும் இவருடைய மனைவியும் பிரியத் தயாராயிருந்தனர். ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு ஈடு செலுத்த அல்லது செவிகொடுக்க முயன் றனர். ஏனென்றால், இருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர். அவர் களுக்கு வேண்டியது என்னவென்றால் வார்த்தை என்ன சொல்கின்றது என்பது மாத்திரமே. கர்த்தர் தம்முடைய ஊழியத்திற்கென்று பென்னை யும் அவருடைய மனைவியையும் ஆசீர்வதிக்க நான் ஜெபிக்கின்றேன். நாம் நம்முடைய கரங்களை நமது சகோதரன் மீது வைப்போம். 34. பிரியமுள்ள தேவனே, சகோ. பென்னை நாங்கள் நேசிக் கிறோம் என்னும் அடையாளமாக எங்கள் கரங்களை அவர்மேல் வைத்துள் ளோம். கர்த்தாவே, இவர் இந்த ஒலி நாடாக்களுடன் அனுப்பப்பட்டு நாங்கள் யாவரும் செல்லமுடியாத தூரமான பிரதேசங்களுக்கும், மலை களுக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் இதை இயக்கிக் காண்பிக்க விரும்புகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். ஆனால் இச்செய்தி யானது உலக முழுவதும் செல்ல வேண்டும். நீர் தாமே எங்கள் சகோதரனை ஆசீர்வதித்து உம்முடைய ஆவியை அருளி, அது தாமே இவர் மீது வந்திறங்க வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கின்றோம். இவரையும் இவருடைய மனைவியையும் அவ்விடங்களுக்கு வழிகாட்டி வழி நடத்தும். ஏனென்றால் அங்கு ஒரு ஆத்துமா இருக்கலாம். அந்த ஒரு ஆடு உள்ளே கொண்டு வரப்படுகின்ற வரையிலும் கதவுகள் மூடப் பட இயலாது. நீர் தாமே தொண்ணூற்று ஒன்பதுடன் திருப்தியடைய மாட்டீர். அந்தப் புத்தகத்திலுள்ள எல்லா பெயர்களும் உள்ளே கொண்டு வரப்படவேண்டும். கர்த்தாவே நாங்கள் கரங்களை வைத்து எங்கள் சகோதரனாக அவரை எங்களுடன் ஐக்கியப்படுத்தும்போது அவர்களுக்கு உதவி செய்யும். எங்கள் உதவியும் எங்கள் ஜெபமும் அவர்களுடன் செல்லும். அவர் எங்கெல்லாம் செல்லுகிறாரோ அங்கெல் லாம் அவரை ஆசீர்வதிக்க நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத் தில் ஆமென். சகோ. பென்! எங்கள் ஐக்கியத்தின் வலது கரத்தை ஊழியக்கார சகோதரர்களாக உம்மிடம் தருகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. 35. (சகோ. ஏர்ல் மார்டின் "சகோ. பிரான்ஹாம், என் மேல் கரங்களை வைத்து நான் போதகராக பணிசெய்ய என்னை அபிஷேகம் செய்வீரா?'' என்று கேட்கிறார் - ஆசி) ஜான் மார்டின்?... எர்ல். சகோ. ஏர்ல் மார்டினை எத்தனைப்பேர் அறிவீர்கள்? அவர் கிறிஸ்து வினுடைய ஊழியர் என்று எத்தனைப்பேர் விசுவாசிக்கின்றீர்கள்? அவர் பெந்தெகோஸ்தே குழுவிலிருந்து நம்மிடம் வந்துள்ளார், இப்பொழுது அவர் போதகராக, தனியாக இருந்து வருகிறார் என்று நான் நினைக் கின்றேன். 36. சகோ. எர்ல் கிறிஸ்துவிற்கு உண்மையான ஊழியனாக இருந்து வருகிறார் என்று நான் அறிவேன். அநேக சம்பவங்கள் நடந் துள்ளன. ஆனால் சகோ. ஏர்லுடன் நடந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. ஒரு நாளிரவு நான் டல்லாஸ், டெக்ஸாஸ் அல்லது வேறொரு இடம் என்று நம்புகிறேன். ('பியுமான்ட்'' என்று ஒரு சகோதரி கூறு கிறார்கள்). பியுமான்ட் டெக்ஸாஸ், அது சரி சகோதரியே, அங்கிருக்கும் இவரை அவர்கள் அழைத்தார்கள். இவருடைய குழந்தை மரிக்கும் தருவாயில் கிடந்தது, அது மரித்து விட்டது என்று எண்ணினார்கள். மூச்சு விடுவது நின்றுவிட்டது. எனது அறைக்கு வந்து நான் படுத்துக் கொண்டிருக்கையில், ஏர்ல், ஒரு தகப்பனாக ஓடிவந்து தனது தோள்களை வளைத்து கீழே குனிந்து தன் கரங்களுடன் என்னை அணைத்து “சகோத ரனே, நீர் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறேன். நான் எப்போதுமே அதை விசுவாசித்து வந்தேன். நீர் வார்த்தையை மாத்திரம் கூறுவீரானால் என் குழந்தை மரித்திருந்தாலும் அது திரும்பவும் பிழைக்கும்'' என்று கூறினார். அக்குழந்தை உயிரடைந்து இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறது. 37. விசுவாசிகளின் ஐக்கியத்தின் வலது கரத்தை அடைய இவர் தகுதியுள்ளவரென்று விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கிறார்கள்- ஆசி) சகோதரர்களே நாம் இவர்மீது நம் கரங்களை வைத்து ஜெபிப்போம். 38. கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் சகோ. மார்டினின் மீது மறுபடியுமாக கரங்களை வைக்கிறோம். கர்த்தாவே நீர் தீர்மானித்த விதமாக அது தூரப்பிரதேசங்களாய் இருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும் சரி, அது நெடுஞ்சாலைகளாயிருந்தாலும் குறுக்கு சாலைகளாயிருந்தாலும், எல்லைக் காடுகளாயிருந்தாலும் சரி, எதுவாயிருந் தாலும் இவரை நாங்கள் அனுப்புகிறோம். எங்கிருந்தாலும் ஆண்டவரே உமது ஆசீர்வாதங்கள்தாமே இவருடன் இருப்பதாக. நாங்கள் எங்கள் கரங்களை இவர்மீது வைக்கையில் உமது வேகத்தையும், எங்களது ஆசீர்வாதத்தையும் இவருக்கு தருகிறோம். எங்கள் மேலுள்ள பரிசுத்த ஆவி தாமே இவருடன் சென்று காடுகளிலும் நெடுஞ்சாலைகளிலும் உள்ள இழக்கப்பட்ட ஆத்துமாக்களிடம் நேராக வழி நடத்தி வழி காட்டட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவரை நாங்கள் அனுப்பு கிறோம். ஆமென். சகோ. மார்டின் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது செல்லுங்கள். கர்த்தர் உம்முடனே இருப்பாராக. 39. அதே காரியத்திற்கு தானே? (சகோ. ரிச்சர்ட் பிளேர் சகோ. பிரான்ஹாமுடன் பேசுகின்றார்--ஆசி) உமது பெயர் ரிச்சர்ட் தானே? (சரி, ரிச்சர்ட் பிளேர்) எத்தனைப் பேர் சகோ. ரிச்சர்ட் பிளேரை அறிவீர்கள்? இவர் தேவனுடைய ஊழியக்காரன் என்று எத்தனைப் பேர் விசுவாசிக் கின்றீர்கள்? இவர் ஐக்கிய பெந்தெகோஸ்தே பிரிவிலிருந்து வருகின்றார். சகோ. பிளேருடைய மகத்தான அழைப்பை நான் நினைவு கூறுகின்றேன். சகோ. பிளேர் என்னை விசுவாசிக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஒரு ஆவிதாமே அவருடன் கிரியைச் செய்து நான் தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தது. அச்சமயத்தை நானறிவேன். ஆனால் அவர் கூட்டங் களில் உட்கார்ந்துக் கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் தாமே திரும்பி அதை வெளியே அழைத்தார், (சகோ. பிளேர் அது சரி என்று கூறுகின்றார்-ஆசி). அந்த முறிவிற்கு அவர் ஆயத்தமாகிக் கொண்டிருந் தார், அது தாமே அவரை சரியான நிலைக்கு கொண்டு வந்தது. அவருடைய அருமையான மனைவி ஒருநாள் என்னிடம் வந்து ''சகோ. பிரான்ஹாமே ரிச்சர்ட் மரிக்கப் போகின்றார் என்று எண்ணுகிறேன் என்று கூறினதை நான் நினைவு கூறுகிறேன். அவர் ஒரு கழுத்துத் துண்டை (Scarf) வைத்திருந்தார்கள் என்று நான் நம்புகின்றேன். அதை நான் கேட்டு ஜெபித்து அத்துண்டை அவர்மீது கொண்டு போய் வைத் தார்கள். இப்பொழுது இங்குள்ளார். (சகோ. பிளேர் ஆமென் என்கி றார்-ஆசி). 40. சிறு பையன் விபத்திற்குள்ளானான் அல்லது... (சகோ. பிளேர் "என் மகன்'' என்கிறார். இவர் மகன் ஒரு விபத்திற்குள்ளாகி மூளையில் பெரிய அடிபட்டு பிழைப்பான் என்ற நம்பிக்கை அற்றபோது, தொலை பேசியின் மூலம் செய்யப்பட்ட ஒரு ஜெபத்தின் மூலம் அக் குழந்தை சுகம் பெற்றது. ("ஆமென்'') சகோ. பிளேர் கிறிஸ்துவிற்கு ஒரு உண்மையான சாட்சி என்பதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்கின்றனர்) உங்கள் ஆசீர்வாதங்கள் இவருடன் செல்லத்தக்கதாக இவருக்கு நீங்கள் ஜெபி யுங்கள். சகோதரரே உங்கள் கரங்களை இவர் மீது வையுங்கள். 41. பிரியமுள்ள தேவனே எங்கள் அன்பும் தயவுமுள்ள சகோதரன், தன்னுடைய குழுவை விட்டுவிட்டு வெளிச்சத்தில் நடக்க வந்துள்ள உம்முடைய ஊழியக்காரனான எங்கள் சகோதரன் பிளேரை நீர் தாமே ஆசிர்வதிக்க வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் கரங்களை இவர் மீது வைத்து எங்கள் ஆசிர்வாதங்களுடனும் நியமத் துடனும் நீர் எங்கெல்லாம் அழைக்கின்றீரோ, கர்த்தாவே அது என்ன பணியாயிருந்தாலும் அங்கே நாங்கள் அனுப்புகின்றோம். உம்முடைய ஆவி தாமே சகோ பிளேரோடு செல்லட்டும். இழக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்ற இவ்வுலகத்தாரிடம் இவரை வழி நடத்தி வழி காட்டும், அதனால் இவர் அந்த காணாமல் போன ஒரு ஆட்டைக் கண்டுபிடித்து மந்தைக்கு திரும்பிக் கொண்டுவந்து சேர்க்க முடியும். நீர் அவருக்கு என்ன வைத்திருக்கிறீரோ அல்லது எதுவாயிருந்தாலும் சரி கர்த்தாவே உம்முடைய ஆவி தாமே இவருடைய வாழ்க்கைப் பிரயாண முழுவதும் வழிகாட்டி, வழி நடத்த வேண்டுமாய் நாங்கள் கேட் கின்றோம். நாங்கள் இவருடைய சகோதரர். ஐக்கியத்தின் வலது கரத்தை இவருக்கு கொடுத்து நீர் தாமே இவருடன் கூட செல்லுமாறு வேண்டு கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். ஐக்கியத்தின் வலது கரம்! நாங்கள் உம்முடன் இருக்கிறோம். சகோ. பிளேர் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. நூறு சதவிகிதம் நாங்கள் உம்முடன் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்காக ஜெபித்து எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் உமக்கு செய்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 42. (சகோ. மெர்லின் ஆந்தன் "நானும் அதே போல் அபி ஷேகம் செய்யப்படவேண்டும் சகோ பிரான்ஹாம்'' என்று கூறுகின்றார் - ஆசி) என்ன ? (''அபிஷேகிக்கப்பட'') நீங்கள் யார்? ('மெர்லின் ஆந்தன்'') மெர்லின் ஆந்தன். ('நான் இச்சபையிலுள்ளேன்'') இச்சபையில் யாரா வது சகோ மெர்லின் ஆந்தனை அறிவீர்களா? இவர் எனக்கு புதிதாக இருக்கின்றார். ("என்னை நினைவிருக்கின்றதா, சால்வேஷன் ஆர்மியில் (Salvation Army) இருந்தவன்'') ஓ, ஆமாம், என்னை மன்னியுங்கள் சகோதரனே. சால்வேஷன் ஆர்மி குழுவிலிருந்து வந்துள்ளவர், அது சரி, அவரை ஞாபகமிருக்கின்றது. நிச்சயமாக இப்பொழுது இவரை அறி வேன். இந்நேரத்தில் இவருடைய முகம் எனக்கு பிரபலமாகத் தோன்றி னதாக எனக்குத் தெரியவில்லை. இவர் தேவனுடைய மனிதனென்று எத்தனைப் பேர் அறிவீர்கள்? (சபையார் "ஆமென்'' என்கின்றனர்- ஆசி) தேவன் இவருக்குள் கிரியை செய்கிறார் என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கின்றீர்கள். ('ஆமென்'') இவருக்காக ஜெபிப்பீர்களா ('ஆமென்''). 43. சகோதரனே, நீர் சால்வேஷன் ஆர்மி (Salvation Army) என்னும் ஒரு சிறந்த குழுவிலிருந்து வந்துள்ளீர்கள் என்று நாங்கள் இப்பொழுது அறிவோம். ஆனால், அக்குழு தெருக்களில் சிறந்த வேலை செய்கின்றது. நசரீன், பெந்கோஸ்தே சபை, அல்லது சால்வேஷன் ஆர்மி அல்லது எதற்கெதிராவது எங்களால் ஒன்றும் கூற இயலாது; அவர்கள் எங்கள் சகோதரர். ஆனால், பாருங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான இக்காலத்தின் செய்தியை சுமப்பவர்கள் நாம் தான் என்பதை விசுவாசிக்கின்றோம். எங்களுடன் அதைச் செய்வீரா? (சகோ. ஆந்தன் ''ஆமென்'' என்கிறார் - ஆசி) நமது கரங்களை சகோதரன் மீது வைக்கையில் நமது தலைகளை வணங்குவோம். 44. அன்புள்ள பரலோகப் பிதாவே, அழைப்பை விடுப்பது நீர் தான். அவர்கள் விசுவாசிக்கத்தக்கதாக வார்த்தையை உயிர்பிக்கச் செய் வது நீர் தான். எங்கள் அருமையான சகோதரன் மீது கைகளை வைக்கை யில் நீர் தாமே இவருடன் இருந்து இவருக்கு உதவி செய்கின்றீர் என்று நாங்கள் நியமத்தின்படி விசுவாசிக்கின்றோம். விசுவாசித்து, மரணத்தை விட்டு ஜீவனை அடைந்து, தேவ னுடைய கிருபையினால் உயிர்பிக்கும் வல்லமையை எங்கள் இருதயங் களில் பெற்றுள்ள நாங்கள் எங்கள் ஆசிர்வாதங்களை இவருடன் அனுப்புகின்றோம். நீர் தாமே இவரை பூமியின் ஒவ்வொரு பாகத்திற்கும் நீர் நியமித்த ஒவ்வொரு இடத்திற்கும் வழிநடத்தி வழிகாட்ட வேண்டு மாய் எங்கள் கரங்களை இவர் மீது வைத்து எங்கள் ஆசிர்வாதத்துடன் அனுப்புகிறோம். உம்முடைய ஆவிதாமே இவருடன் சென்று இவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், பெலத்தையும், இவருடைய ஊழியத்தில் வெற்றியையும் அருள்வதாக. இயேசுக்கிறிஸ்துவின் நாமத்திலே இவரை அனுப்புகின்றோம் ஆமென். 45. கர்த்தர் உம்மை ஆசிர்வதிப்பாராக சகோதரனே. சகோதரரே இவருடன் கைகளைக் குலுக்குங்கள், அதுதான் ஐக்கியத்தின் வலது கரமென்பது உங்களுக்குத் தெரியுமா.... (Right hand of fellowship) அது சரி, கர்த்தர் உங்களெல்லாரையும் ஆசிர்வதிப்பாராக. 46. (''நான் அதிகாரப்பூர்வமாக அபிஷேகிக்கப்படவில்லை, இயேசுவின் நாமத்திலே நீங்களும் மற்றவர்களும் என் மேல் கைகளை வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று சகோ. கேரல் கேட்கிறார் - ஆசி) நீங்கள், என்னவெல்லாம் விரும்புகிறீரோ உம்முடைய... பெயர் என்ன? (''சகோ கேரல், சின்சின்னாட்டியிலிருந்து வருகின்றேன்.'') சகோ. கேரல். (சகோ கேரல், "நான் ஒரு அபிஷேகிக்கப்பட்ட ஊழியன் ஆனால் பெண்களை ஊழியர்களாக அபிஷேகம் செய்யும் சகோதரனுடன் என் னால் இணங்கமுடியவில்லை அதனால் அதிலிருந்து பிரிந்து வர நேரிட் டது'' என்று சகோ கேரல் கூறுகிறார் - ஆசி) - இவர் சின்சின்னாட்டியிலிருந்து வந்திருக்கிற சகோ. கேரல். சகோ கேரலை அறிந்தவர்கள் கரங்களை..... சின்சின்னாட்டியிலிருந்து வருகிறபடியால் எல்லாரும் அறிந்திருப் பீர்கள் என்று என்பதில் சந்தேகமில்லை. அவர் ஸ்திரீகளை ஊழியர்களாக அபிஷேகிக்க விரும்பின கூட்டத்திலிருந்து வந்திருக்கிறேன் என்று கூறு கின்றார். அதில் இருக்கமுடியவில்லை ஆதலால் அதிலிருந்து இவர் வெளிவர வேண்டியதாயிற்று. இதே விதமாகத்தான் நான் மிஷனரி பாப்டிஸ்டுகளிடமிருந்து பிரிந்து வந்தேன். டாக்டர் ராய். E. டேவிஸ் அவர்களை எத்தனைப் பேர் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். நிச்சயமாக நீங்கள் அறிந்தருப்பீர்கள் பாருங்கள். அவர் சில பெண் பிரசங்கிகளை அபிஷேகம் செய்ய விரும்பி னார், அப்பொழுது நான் ஒரு மூப்பன் என்ற முறையில் “இல்லை ஐயா'' அதை என்னால் செய்ய முடியாது, மனமார அது தேவனுடைய வார்த்தைக்கு எதிரான ஒன்று,'' என்றேன். 47. சகோ. கேரல் உம்மை நான் அறியேன், ஆனால் உம்மு டைய சாட்சியின்படியேயும் நீர் நிற்கின்ற சத்தியத்தின்படியேயும்..... பெண்களுக்கெதிராக எங்களிடம் ஒன்றுங்கிடையாது. அவர்கள் சகோதரிகள். அவர்களை நேசிக்கிறோம். ஆனால் அவர்கள் ஒரு ஸ்தானத்தை உடையவர்களென்றும் அதில் அவர்கள் நிற்க வேண்டு மென்றும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். பாருங்கள்? அவர்கள் மனிதனுக்கு அன்புடையவர்களென்றும் ஒரு துணை என்றும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். அது மட்டுமல்லாமல், இரட்சிப்பிற்கு அடுத்ததாக தேவன் மனிதனுக்கு அளிக்கின்ற, ஒரு சிறந்த வெகுமதி என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் தேவனுடைய வார்த்தையின்படி பிரசங்க பீடத்தில் அவளுக்கு இடமில்லை. அதன் பேரிலும், தேவன் பேரில் நீர் கொண்டுள்ள விசுவாசத்தின்படியேயும், எங்களுடன் ஐக்கியங் கொள்வதற்காகவும் உம்மீது கரங்களை வைக்கிறோம். நம்முடைய கரங்களை இவர் மீது வைப்போமாக. 48. எங்கள் அன்புள்ள பரலோக பிதாவே! இந்த வாலிப மனிதன் எவ்வாறு நினைக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. உண்மையான சத்தியத்திற்காக இவர் வெளியே தள்ளப்பட்டுள்ளார். ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்றிருக்கிறது. கர்த்தாவே இவரு டைய வாழ்க்கைப் பிரயாணம் முழுவதிலும், நீர் எங்கெல்லாம் அனுப்பு கின்றீரோ அங்கெல்லாம் உம்முடைய ஆவிதாமே வழிகாட்டி வழி நடத்தட்டும். இவருக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் என்றும் இவர் அறியச் செய்யும், சத்தியத்திற்காக எவ்வளவு காலம் நிற்கின்றாரோ அவ்வளவு காலம் இவருக்கு நாங்கள் உதவியும் துணையுமாயிருப்போம். இதை அருளும் கர்த்தாவே. இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இவரை நாங்கள் அனுப்புகிறோம். ஆமென். சகோ. கேரல் கர்த்தர் உங்களை ஆசிர் வதிப்பாராக. எல்லோருடைய கைகளையும் தற்போது உம்மீது வைக்கக் கண் டீர். அதற்காகத்தான் எல்லாரும் ஐக்கியத்தின் வலது கரத்தை உமக்கு கொடுத்தார்கள். 49. இச்சபையில் சகோ. ரட்டல் அவர்கள் நியமப்பூர்வமாக இன்னும் அபிஷேகிக்கப்படவில்லை..... எத்தனைப் பேர் சகோ. ரட்டலை அறிவீர்கள்? (சபையார் "ஆமென்'' என்கின்றனர்.- ஆசி) நாமெல் லோரும் இவரை அறிவோம். இவர் தேவனுடைய மனிதனென்று எத்த னைப்பேர் அறிவீர்கள் ("ஆமென்''). அன்புள்ள பரலோக பிதாவே, ஆழமான புதைச் சேற்றைக் கடந்து, தனது சபை விழுந்து போனதைக் கண்டும், நடந்த மற்ற எல்லாக்காரியங் களையும் கண்டும், இன்னும் விசுவாசமாயிருக்கிற இச்சகோதரனின் மீது மூப்பர்களாகிய நாங்கள் எங்கள் கரங்களை வைக்கின்றோம். அது வந்து? .... நாங்கள் எங்கள் கரங்களை இவர் மீது வைத்து எங்கள் ஆசிர் வாதங்களை இவருக்களிக்கின்றோம். கர்த்தாவே, இவரை வார்த்தை யினால், மிகுதியாக அபிஷேகித்து இப்பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் இவரை அனுப்பும். இவர் மீதிருந்து உதவும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இவரை அனுப்புகிறோம். ஆமென். 50. சகோ. ரட்டல், எங்கள் ஐக்கியத்தின் வலது கரமானது உமக்கெப்போதும் உண்டு. இவரை நானறிவேன். இவர் என்னுடைய மகனைப் போன்றவர். இவருடைய தாயும், தந்தையும், நானும் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிவோம். சகோ ரட்டல் தேவனுடைய ஊழியன் என்று அறிவேன். நான் இவருடன் ஊழியம் செய்துள்ளேன். சகோ. ரட்டல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 51. இவர் பெயர் என்ன? நீங்கள் யார் சகோதரனே? (யாரோ ஒருவர் சகோ மார்டினுடைய உறவினர் என்று கூறுகிறார் - ஆசி) சகோ. மார்டினை அறிவீர்களா. உங்கள் பெயர் என்ன (சகோதரன், ''சங்கை மெக்கோமாஸ்'' என்று கூறுகின்றார் - ஆசி) சகோ மெக்கோமாஸ் இங்கு யாரும் இவரை அறியவில்லை என்று நான் நினைக்கிறேன். சகோ டைலர் இவரை அறிந்துள்ளார். சுவிசேஷத்தை சுமந்து செல்வதற்கென தம் மீது கரங்கள் வைக்கப்பட்ட இவர் இங்கு வந்திருக்கிறார். சகோதரன். மெக்கோமாஸ் நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள். (''ராக்போர்ட், இல்லினாய்'') ராக்போர்ட், இல்லினாய் ("நீங்கள் சென்ற வாரம் அல்லது சென்ற திங்களிரவு என்னை அழைத்து (தொலைபேசியில்) என் மனைவிக்காக ஜெபித்தீர்கள்'') டூஸ்சானிலிருந்து, அது சரியா? ("டூஸ்சான், அரி சோனா'') ஓ என்னை அழைத்ததை நினைவுகூறுகிறேன் ( அடுத்த நாள் காலை அவள் சுகமடைந்து எழுந்தாள்'') கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (சகோ. பிரான்ஹாமிடம் சகோ. மார்டின் ஏதோ கூறுகிறார் - ஆசி) என்ன? ( ' 'எனது இளைய சகோதரி') உமது சகோதரி ('பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள், இப்பொழுது இங்குள் ளார்கள்'') சில இரவுகளுக்கு முன்னால் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட் டிருந்தார்கள். இப்பொழுது இங்குள்ளார்கள். சகோ. மார்டின், அப்பொழுது உமக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். இச்செய்தியை எடுத்துக் கொண்டு ஓட இவர். விரும்புவதில் ஆச்சரியமொன்றுமில்லை. சகோதரரே, நாம் கரங்களை வைப்போம். 52. அன்புள்ள ஆண்டவரே, நானும் இங்கிருக்கும் ஏனை யோரும் உமது ஊழியக்காரனுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக்கொடுத்து, இவர் மீது கரங்களை வைத்து உம்முடைய ஆசீர்வாதம் தாமே... (சகோ. பிரான்ஹாம் கூறுவது சரியாக ஒலி நாடாவில் பதிவாக வில்லை - ஆசி) .... நீர் தாமே அபிஷேகித்திருக்கிறீர். உமது ஆசீர்வாதம் தாமே இவரோடிருந்து இவருக்கு வழிகாட்டி வழிநடத்த வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென். என் சகோதரனே, ஐக்கியத்தின் வலது கரமும், மற்றவைகளும் எப்போதும் உம்முடனே இருப்பதாக. தேவன் உம்மோடிருப்பாராக. 53. (யாரோ ஒருவர் "சகோ பிரான்ஹாம்'' என்று அழைக்கிறார் - ஆசி) ஆம் சகோதரனே? (இன்னும் இவ்வாறு அபிஷேகிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார்) சரி ஐயா. நாம் நம்புகிறேன்..... (சகோ.. டாரிஸ்) சகோ. டாரிஸ். எனக்கு உம்மை ..... ('நான் சகோ . ஏர்ல், சகோ பிருவரை அறிவேன்'') இம்மனிதன் சகோ. டாரிஸ் ஆவார். நீர் எங்கிருந்து வருகின்றீர்கள் சகோதரனே? ('பிளாக்ராக், ஆர்கென்ஸாஸ்'') பிளாக்ராக் ஆர்கென்ஸாஸ் சகோதரனே ("நான் அச்சகோதரனை அறிவேன்'')...... தெரியுமா. யாரோ ஒருவர், இங்கு சொன்னார்களென்று... நான் விசுவாசிக்கின்றேன். சகோ பிருவர், இக்காலை நான் அவர்களை சந்தித்தேன் என்று விசுவாசிக்கின் றேன். சகோதரன், சகோதரி வேயில், இவர் தேவனுடைய மனிதனும் ஊழியக்காரருமாவார் என்று இவரை அவர்கள் அறிவார்களென்று நான் யூகிக்கிறேன். அதிசயம்! 54. சரி, இப்பொழுது செய்தியைச் சுமந்து செல்லப் போகும் எனதருமை சகோதரனே. நாங்கள் உம்பின் நின்று எங்களால் இயன்றதை யெல்லாம் செய்வோம் என்று நீரறிய நாங்கள் விரும்புகின்றோம். தேவன் எந்த மூலைகளுக்கு உங்களை அனுப்ப சித்தம் கொண்டிருக்கின்றாரோ அவ்விடங்களுக்கெல்லாம் நீர்தாமே இச்செய்தியை எடுத்துச் செல்ல நாங்கள் உமக்காக ஜெபிக்கின்றோம். நமது சகோதரன் டாரிஸின் மீது நாம் கரங்களை வைப்போம். அன்புள்ள தேவனே, இப்பொழுது எங்கள் சகோதரனின் மீது நாங்கள் கரங்களை வைத்து, ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இவரை அனுப்புகிறோம், நீர்தாமே இவரை அபிஷேகித்து, ஐக்கியத்தின் வலது கரத்தை இவருக்களியும். உம்முடைய ஆவிதாமே இவரோடு சென்று இவருக்கு வழிகாட்டி வழி நடத்த வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 55. அனேகர் சகோ அந்தோணியை அறிவீர்கள் என்று நான் விசுவாசிக்கின்றேன். அனேக காலங்களாக நம்முடனே இருக்கின்றார். இவர் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனென்றும், தன்னை அர்பணித்த ஒரு வாலிபனென்றும் நான் அறிந்து, விசுவாசிக்கின்றேன். இவர் மீது அதிகாரப்பூர்வமாக கரங்கள் வைக்கப்படவில்லை, ஆனால் பாருங்கள்? இவ்வாறு நடக்கப் போகின்றது என்று அவர் அறியவில்லை நண்பர் களே, பாருங்கள்? இப்பொழுது சரியாக, நல்லதாக இருக்கின்றது. ஆகையால் சகோ. அந்தோணியின் மீது நாம் கரங்களை வைத்து ஐக்கியத்தின் வலது கரத்தை இவருக்களிக்கப் போகின்றோம். தேவன் தான் அபிஷேகத்தைச் செய்ய வேண்டும். நாங்கள் இச்சகோதரனை நம்பி, அன்புகூர்ந்து, இச்செய்தியில் நம்மில் ஒருவராக இவரிருக்கின்றார் என்பதை இவரும் நீங்களும் அறியத்தக்கதாக இவ்வாறு செய்யப் படுகின்றது. தேவாசீர்வாதங்களை உடையவராயிருக்க இவர் விரும்பு கின்றார். நாமும் அதையேதான் வேண்டிக்கொள்கிறோம். சகோதரனின் மீது கரங்களை வைத்து நாம் ஜெபிப்போம். 56. அன்புள்ள ஆண்டவரே, இந்த சிறிய எளிய, உம்முடைய இத்தாலிய ஊழியன், கர்த்தாவே, தம்மேல் கரங்கள் வைக்கப்பட, அதிகாரப்பூர்வமாக சபையிலிருந்து சுவிசேஷத்தின் வலது கரமானது இவர் மேல் வைக்கப்பட இன்றிரவு வந்திருக்கிறார். உம்முடைய மகத் தான வல்லமையானது இச்சிறிய வாலிபனை... நீர் செல்ல நியமித்த உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அனுப்பட்டும். இவர் தாமே மக்களை பாவத்திலும், வியாதியிலிருந்தும் விடுவித்து வாழ்நாளெல்லாம் உமக் காக உழைக்க நீர்தாமே இவருக்கு வழிகாட்டி வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நாங்கள் இவரை அனுப்புகையில் எங்கள் ஆசீர்வாதங்கள் தாமே இவர் மீது தங்கியிருக்கட்டும். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 57. (யாரோ ஒருவர் சகோ.பிரான்ஹாமுடன் பேசுகின்றார் - ஆசி) ஓ, நாம் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளோம் என்று எனக்குத் தெரியாது; ஒரு நிமிடத்திற்கு ஐம்பது சென்ட் செலவாகும். யாராவது ஒருவர் இங்கே வந்து... இங்கே ஏறிவந்து நீங்கள் யாரென்பதை இந்த ஒலிப்பெருக்கி முன்பாக கூறவும் சகோதர்களே. (ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களைக் கூறுகின்றனர். "பாட் டைலர்'', "க்ளாட் பாக்கஸ்,'' “டேல் பாட்டர்'', "ஹேனசே'', "ஜேம்ஸ் ஹ்ம்ஸ் '' ''ஏர்ல் ஹார்னர்'' -ஆசி) அவ்வளவுதானே (யாரோ ஒருவர் ஆம் என்கிறார் - ஆசி). என் சகோதரர். இங்கிருக்கும் மனிதர்களே, இக்காலத்தின் செய்திதான் சத்தியமென்பதை தேவனுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் விசுவாசிக் கின்றீர்களா? (சகோதரர் ஆமென் என்கின்றனர் - ஆசி) உங்கள் முழு இருதயத்தோடும் இதை விசுவாசிக்கின்றீர்களா (ஆமென்) சரி, நீங்கள் ஆவலோடிருக்கின்றீர்கள். நாங்கள் எங்கள் கரங்களை உங்கள் மீது வைக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் உம்மோடிருக் கிறோமென்றும் எங்களால் முடிந்த வரை எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவியாயிருப்போமென்றும் நீங்கள் அறிய நாங்கள் விரும்புகிறோம். சகோதரரே நீங்கள் இங்கு வர நான் கைகளை வைக்க ஏதுவாயிருக்கு மென்று நான் யோசிக்கின்றேன். நாம் இவர்கள் மீது கரங்களை வைக் கையில் நாம் தலைகளை வணங்குவோம். அன்புள்ள தேவனே, இங்கே ஒரு குழுவாக மனிதர்கள் உள்ளனர். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஒவ் வொருவரின் மீதும் நான் கைகளை வைக்கிறேன். நீர் தாமே இவர்கள் ஊழியக்காரர்களாய் இருக்கும்படிக்கு அழைத்தீர். இவர்கள்தாமே தங்கள் வாழ்நாள் முழுவதும் இதைப் பிரசங்கம் செய்யட்டும்... சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கம் செய்யட்டும். இவர்களுக்கு நாங்கள் சுவிசேஷத்தின் வலது கரத்தை ஆசீர்வாதங்களை அனுப்புகை யில் கர்த்தாவே, உம் ஆசீர்வாதம் தாமே இவர்களோடு செல்ல நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் அழைத்தவிதமாக அதுதாமே பூமியின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லட்டும். இவர்கள் எந்த அளவிற்கு உழைக்க நீர் அழைத் தீரோ அதுவரை இவர்கள் உமக்காக உழைத்து, ஊழியம் செய்யட்டும். இவர்கள் தேவனுடைய வீரமுள்ள உண்மையுள்ள ஊழியர்களாக இருக்கட்டும், இதை அருளும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் நாமத் தினால் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 58. கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக சகோதரரே. சகோதரர் ஹீம்ஸ் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. உங்கள் ஒவ்வொருவரோடும் இருப்பாராக. ''கிறிஸ்தவ அன்பினால் நம் இருதயத்தை பிணைக்கும் பிணைப்பு ஆசிர்வதிக்கப்படுவதாக; நேசமுள்ளவர்களின் ஐக்கியம் விண்ணில் உள்ளது போன்று ஆகும்.'' 59. அவர் அற்புதமானவர் அல்லவா? எத்தனை ஊழியர்கள் தங்கள் மீது கரங்கள் வைக்கப்பட காத்திருந்தார்கள் என்று இப்போது யோசித்துப் பாருங்கள். 60. நாம் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளோம் என்று நான் அறியவில்லை. ஆகவே வெளியிலிருக்கும் மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். இச்சிறிய செய்தியை இன்றிரவு தொலைபேசியில் இணைக்கப்போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. 61. நாம் இப்போது வார்த்தையை வாசித்து பிறகு ஜெபித்து இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் தாமே, நான் உங்களுக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்புகின்ற இச்செய்திக்குள் நேராகச் செல்வோம். 62. இப்பொழுது நாம் திருப்பிக் கொண்டிருக்கையில்... பாடத் திற்காக, இச்ஷணத்தில் நான் அறிவிப்பேன். இப்பொழுது நாம் எண்ணாகமம் 22 ஆம் அதிகாரம், 31ஆம் வசனத்திற்கு திருப்புவோம். எண்ணாகமம் 22:31, பாடத்திற்காக நீங்கள் திருப்புகையில், நீங்கள் படிக்க விரும்பினால் அல்லது குறித்துக் கொண்டால் சரி. 63. இப்பொழுது நீங்கள் எல்லாரும் நினைவில் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நான் உங்களை மறுபடியும் காண்கிற வரையில், இக் கோடைகாலத்தில் சில நாட்கள் என்றாவது ஒரு சமயம் என்று நம்புகிறேன், நான் வெளிநாடுகளுக்கு செல்லாமற் போனால், நான் வருவேன். ஆனால் இப்பொழுது காரியங்கள் எல்லாம் சரியாக எப்படி அமைந்தது, பரிசுத்த ஆவியானவர் தாமே, தாம் தெரிந்தெடுத்த இடங்களுக்கு நம்மை அனுப்புகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அந்த வழியாகத்தான் நாம் செய்ய விரும்புகிறோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 64. பிதாவே, நாங்கள் உம்முடைய வசனத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். நீர் அதை எங்களுக்கு ஆசீர்வதித்து உம்முடைய அபி ஷேகத்தினால் நிறைத்து நாங்கள் புரிந்துக் கொள்ள உதவி செய்வீரா! இதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம், ஆமென். 65. எண்ணாகமம் 22ம் அதிகாரத்தின் 31ம் வசனத்தை நாம் வாசிப்போமாக: ''அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந் தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தை தம் முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.'' எண்ணாகமம் 22:31 66. இந்த வேத வாசிப்பினின்று நாம் சிந்திக்கத்தக்கதாக நான் எடுத் துக்கொண்ட தலைப்பு: ''தேவன் தமது வார்த்தையைப் பற்றின சிந்தனையை எப்பொழுதாவது மாற்றுவாரா?" என்பதாகும். 67. இது ஒரு அருமையான தலைப்பும் ஒரு மகத்தான சத்திய முமாகும். அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். தேவன் எதையாகிலும் சொன்னபின்பு அதை குறித்து ''நான் தவறு செய்துவிட்டேன்'' என்று சொல்லக் கூடுமா? அல்லது தேவன் தமது வார்த்தையை உரைத்தபின்பு, அதை திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூடுமோ?. 68. மேற்கூறிய காரியத்தை நான் தெரிந்துதெடுக்கக் காரணம். வேதத்திலுள்ள அநேக சம்பவங்களில் ஒன்றான இது, இதை வாசிக்கும் ஒருவனுக்கு தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்த சிந்தனை யினின்று மாறுவார் என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது. ஏனெனில் அவர் பிலேயாமிடம் முதலில் ஒன்றை கூறிவிட்டு பின்பு வேறோன்றை கூறுகின்றார். அநேக ஜனங்கள் பிலேயாமை ஒரு குறி சொல்லுகிறவன் அல்லது வேறு யாரோவென்று உருவகப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவன் கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் 69. இந்த செய்தியின் மேலெழுந்த வாரியான சாராம்சத்தை முதலில் பார்ப்போம். இஸ்வேலர் எகிப்தினின்று விடுவிக்கப்பட்டு கானானுக்குப் பிரயாணமாய் சென்று கொண்டிருந்தார்கள். கர்த்தர் அவர் களோடு துணை நின்று அவர்களுக்கு எதிராக வந்த எல்லா சத்துருக் களையும் அவர்களை விட்டு விலக்கினார். ஏனெனில் இஸ்ரவேலர் அவரு டைய கற்பனைகளுக்கு பயந்து அதற்கு கீழ்படிந்து நடக்கும் பட்சத்தில், அவர்களுக்கு முன்பாக குளவிகளை அனுப்பி அவர்களின் சத்துருக்களை விரட்டியடிப்பேன் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருந்தார். இந்த வேலை இஸ்ரவேலுக்கு ஒரு பெரிதாக எப்பொழுதும் இருந்ததில்லை. அந்நாளில் வசித்த இராட்சதரான அமலேக்கியர் அவர்களுக்கு முன்பாக அற்பமாயிருந்தார்கள். பார்வைக்கு இஸ்ரவேலர் சிறிய கூட்டமாயிருந் தாலும், ''கர்த்தர் சொல்லுகிறதாவது'' என்ற வார்த்தையின்படி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள், எப்பேற்ப்பட்ட எதிர்ப்புகள் வந்த போதிலும் சரி, தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தையானது இஸ்ரவேலரைத் தோல்வியின்றி செல்லும்படி பார்த்துக்கொண்டார். 70. பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலர் புதிய ஏற்பாட்டின் மண வாட்டிக்கு ஒரு உதாரணம். இஸ்ரவேலர், எகிப்தினின்று விடுவிக்கப் பட்டு கானானுக்கு சென்றார்கள். அதுபோல மணவாட்டி உலகத்தினின்று விடுவிக்கப்பட்ட கானானாகிய ஆயிரம் வருட அரசாட்சிக்கு செல்லு கின்றாள். 71. மோவாப் தேசம் இன்றுள்ள ஸ்தாபன சபைகளுக்கு அடை யாளமாயிக்கின்றது; இவர்கள் அந்த தேசத்திலிருந்து சில ராஜாக்களை கொன்று அங்குள்ள எல்லாவற்றையும் அழித்துவிட்டு ராஜ்ஜியத்தைக் கட்டிக் கொண்டார்கள். இவர்களுடைய தேசம் ஒரு புறஜாதியின் தேச மல்ல. இஸ்ரவேலர் தொழுது ஆராதித்த அதே தேவனைத்தான் மோவாபி யர்களும் சேவித்தார்கள். லோத்து தன் சொந்த குமாரத்திக்கு பெற் றெடுத்த குமாரனால் உண்டானது இந்த மோவாப் தேசம். அவன்தான் இந்த தேசத்தின் தலைவன், இவனால் இந்த தேசமானது கட்டப்பட்டு பல அமைப்புகளையும் பெற்று ஜனங்களால் விருத்தியடைந்தது. 72. இஸ்ரவேல் மட்டுமே ஆபிரகாமின் வித்தாயிருந்தான்; லோத்து அல்ல; ஈசாக்கினின்றும் யாக்கோபினின்றும் இஸ்ரவேல் பன்னிரெண்டு கோத்திரங்களாக ஊற்றெடுத்து வந்தன. இந்த யாக்கோபு 'இஸ்ரவேல்' என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் இவன் தேவனோடு போராடினான். 73. இதை வாசிப்பவர்களும் தொலைபேசியின் மூலம் கேட்பவர் களும் என்னை ஒரு மார்க்க வெறி கொண்டவன் என்று எண்ண வேண்டாம். அவ்விதமாக நான் இருக்கிறேன் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட செய்திக்கு நான் உத்திரவாதமுள்ளவனாயிருக்க வேண்டும். அதற்கு நான் பக்தியுள்ள வனாக நடக்கவேண்டும். இல்லையெனில் நான் ஒரு மாய்மாலக்காரனாக காணப்படுவேன். நான் எதைச் சொல்ல அனுப்பப்பட்டேனோ அதையே யன்றி வேறெதையும் கூறமுடியாது. இன்றுள்ள கிறிஸ்தவ சமுதாயத் திற்கு ஏற்பட்டுள்ள பெரிய சத்துரு, ஸ்தாபிக்கப்பட்ட சபைகள்தாம் என்று நான் நினைக்கிறேன். முடிவில் அது சபைகளின் ஐக்கிய ஆலோசனை சங்கம் என்று அதை என்னால் வேதரீதியாக தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு நிரூபிக்க முடியும். மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும் என்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறேன். ஏனெனில் தேவன் ஒருபோதும் எந்த காலத்திலும் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட சபையை அங்கிகரித்ததில்லை. ஒவ்வொரு சமயமும் ஒரு மனிதன் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தும்போது, பரிசுத்தாவி யானவர் சபையை விட்டு விலகுகிறார். அதன்பின் ஒருபோதும் அதில் திரும்பு வதில்லை. எந்த சரித்திரக்காரரையாவது கேட்டுப் பாருங்கள்; அல்லது நீங்களே ஆராய்ந்து பாருங்கள். இப்படி ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் அங்கத்தினர்களால் வளர்ந்து பெருகினாலும் தேவ ஆவியினால் ஒரு போதும் உயிர்ப்பிக்கப்படுகிறதில்லை. 74. மோவாப் ஸ்தாபிக்கப்பட்ட சபைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று முன் குறிப்பிட்டேன். அவர்கள் தேசமானது அவர்களுடைய ஸ்தாபனங்களைப் போல் ஸ்தாபிக்கப்பட்டு, இஸ்ரவேல் வணங்கும் அதே யேகோவா தேவனை சேவிக்கும் மார்க்கத்தை உடையவர்களாயிருந்தா லும் அவர்கள் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட ஜனக்கூட்டமாயிருந்தார்கள். 75. இவர்கள் இயற்கையான சபைக்கு உதாரணமாயிருப்பது போல இஸ்ரவேலர் தங்களுடைய யாத்திரையில் ஆவிக்குரிய சபைக்கு உதாரணமாயிருந்தார்கள். இஸ்ரவேல் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட தேசமா யிருக்கவில்லை. அவர்கள் தேவனைப் பின்பற்றினமட்டும் ஒரு தனிப் பட்ட கூட்டமாக இருந்தனர். அவர்கள் பரதேசிகளாய் இருந்து அக்கினி ஸ்தம்பம் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் செல்லுகின்றவர்க ளாயிருந்தனர். அவர்களிடம் விருத்தசேதனம் என்ற தேவக் கட்டளை யான ஒழுங்கு மட்டும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் முடிவில் அவர்கள் தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டபோது- அங்கு தான் அவர்கள் நிலை தடுமாறி விழுந்து தங்களிடம் அனுப்பப்பட்ட மேசியாவையே புறக்கணித்தனர். 76. எப்பொழுதும் ஆவிக்குரிய சபைகளும் இயற்கைகுரிய ஸ்தாபன சபைகளும் ஒன்றையொன்று சந்திக்கும்பொழுது அங்கு மோத லும் சண்டையும் உண்டாகின்றது. அது அவ்விதமே சம்பவிக்கின்றது. மோதல் உண்டாகின்றது. இதற்கு காரணம் பொறாமையே! இந்த பொறாமை மாமிசப்பிரகாரமான ஒத்து போகுதலையும், போலி ஆள் மாறாட்டத்தையும் பிறப்பிக்கின்றது. முன் காலத்தில் எது நடந்ததோ அதுவே இன்றும் சம்பவிக்கின்றது. ஒரு தனிப்பட்ட மனிதனின் மூலம் தேவன் சில காரியத்தை செய்யும் பொழுது, அந்த மனிதனிடம் எதை தேவன் செய்தாரோ அதையே எல்லாரும் காப்பியடிக்க முயற்சிக்கின் றார்கள். இத்தன்மை மாமிசப் பிரகாரமான போட்டிக்கு காரணமாகிவிடு கின்றது. முடிவில் அவர்களின் முயற்சி ஆவிக்குரிய பயன்களை கொடுக் காமல் போவதைக் காணும் பொழுது, அரசியல் ஆதிக்கத்தை அதற்கு பதிலாக இணைத்து ஜனங்களின் மனதைக் குழுப்பி தங்களைப் பின்பற்று வதற்கென்று சீஷர்களை இழுத்துக் கொள்ளுகின்றார்கள். 77. இதுதான் சரியாக ஆதியிலும் நடைபெற்றது. இரு பையன் களான காயீனும் ஆபேலும் பூமியல் இருந்தனர். ஆபேல், காயீனுடைய பலியைப் பார்க்கிலும் ஒரு உன்னதமான பலியை தேவனுக்குச் செலுத் தினான். ஆதலால் தேவன் கீழே இறங்கி வந்து அவனுடைய பலியை அங்கீகரித்து உறுதிப்படுத்தினார். இது காயீனுக்கு தன் சகோதரனாகிய ஆபேலின் மேல் பொறாமையை உண்டு பண்ணி, அதனால் தன் சகோதரனைக் கொன்றான். 78. இது ஆதியில் ஆரம்பித்தது, இயற்கையும் ஆவிக்குரியவை களும், ஆனால் காயீனும் ஆபேலும் ஓரே தேவனைத்தான் தொழுதார்கள். ஓரே விதமான பலி பீடங்களைத் கட்டினார்கள். ஆலயத்தில், அதே பீடத்தில் அதே தேவனைத் தொழுதார்கள். ஆனால் காயீன் தன் சொந்த மூளையின் யுக்தியின்படி நிலத்தின் கனிகளை பலி பொருளாக, பாவ பிராயச்சித்தத்திற்கு கொண்டு வந்து படைத்தான். அதையே தான் இன் றும் ஜனங்கள் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் பழத்தை தின்றதின் மூலமே பாவத்திற்குள்ளானார்கள் என்று நினைக்கின்றார்கள். அது மட்டுமல்ல. தற்பொழுது இன்னும் யுக்தியின் முயற்சியினால் அது, ஆப்பிள் பழம் அல்ல ஏப்பிரிக்காட் பழமாயிருக்கும் என்று கருதுகின்றார்கள். 79. ஆனால், ஆபேல் சரியான பலியை தேவனுக்கு செலுத் தினான். பாவம் பிறந்தது பழத்த்தினாலல்ல. அது இரத்த சம்பந்தப்பட்டது என்று அவன் வெளிப்பாட்டினால் அறிந்திருந்ததினால் அவன் ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக கொண்டு வந்தான். ஆகவே, நீதியின் ஆரம்பம் தேவனுடைய வெளிப்படுத்தின சத்தியத்தில் காணப்படுவ தனால், ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, முழுவதும் இந்த வெளிப் பாட்டின் மேலே கட்டப்படுகின்றது. 80. ஒரு நாள், இயேசு மலையிலிருந்து இறங்கினபிறகு தன்னு டைய சீஷரிடம் ''மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்கிறார்கள்? என்று கேட்டார். "ஒருவன் நீர் மோசே என்றான் வேறொருவன் நீர் எலியா, நீர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்றான்.'' அப்பொழுது அவர் "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்டார். 81. அப்பொழுதுதான் அப்போஸ்தலனாகிய பேதுரு தேவனால் ஊக்குவிக்கப்பட்டு, ஆவியினாலே உயிர்ப்பிக்கப்பட்டு ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்ற அற்புதமான அறிக்கையைச் செய்தான். 82. இந்த அறிக்கையைப் பாருங்கள். யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப் படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கின்ற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். நீ பேதுருவாய் இருக்கிறாய் இந்தக் கல்..... எந்தக் கல்? கத்தோலிக்கர் பேதுருவாகிய இந்த சிறிய கல்லின் மேல் கட்டினார்'' என்கிறார்கள். அவ்வாறே பிராடெஸ்டெண்டுகளும் கிறிஸ்துவாகிய கல்லின் மேல் கட்டினார் என்கிறார்கள். இது வித்தியாச பேதம் உண்டாக்குவதற்கல்ல. அவர் யார் என்று பேதுரு கொண்டிருந்த வெளிப்பாட்டின் மீதுதான் கட்டப்பட்டது. "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்: பிதாவானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து''. 83. "யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத் திலிருக்கிற என் பிதா உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மீது என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை.'' வெளிப்படுத்தப்பட்ட ஆவிக்குரிய தேவனுடைய வார்த்தை ! 84. விசுவாசத்தினால் ஆபேல் ஒரு உன்னதமான பலியை தேவனுக்கு செலுத்தினான். மாம்சீகமான விசுவாசியோ, தன் கைகளின் பிரயாசத்தை (அழகிய கனிகளாலான பலி) தேவன் அங்கீகரிப்பார் என்று நினைத்தான். ஆனால் அங்கு உண்டானதோ சண்டையாகும். ஆபிரகாமிற்கும் லோத்திற்கும் இடையில் சச்சரவு உண்டாயிற்று என்று நாம் காண்கிறோம். 85. அதுபோலவே மோசேக்கும், கோராகு, தாத்தானுக்கும் இடையில் சச்சரவு உண்டாயிற்று. ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண் ணப்பட்டபடியே, மோசே வார்த்தையையுடையவனாய் அபிஷேகிக்கப் பட்ட தீர்க்கதரிசியாக இஸ்ரவேலருக்கு தலைவனாய் தெரிந்து எடுக்கப் பட்டான் என்று நிரூபிக்கப்பட்டது. அவன் எதையெல்லாம் செய்வான் என்று தேவனால் கூறப்பட்டதோ அவையெல்லாம் செய்தான். ஆனால் கோராகு, மாம்சீகமானவனாயிருந்து அவர்கள் மத்தியில் ஒரு ஸ்தாப னத்தை, ஒரு மனித குழுவை ஏற்படுத்த விரும்பினான். ஆனால் இக்காரி யங்களுடன் தேவன் ஈடுபடுவதில்லையென்பதற்கு உவமையாக வசனம் இதை விளக்கிக் கூறுவதாயுள்ளது. இவ்வித காரியத்தை கோராகு செய்த உடனே அவன் மோசேயைப் பார்த்து "நீங்கள் மிஞ்சிப் போகி றீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; நீர் ஒருவர்தான் பரிசுத்தன் என்று ஏன் சொல்கிறீர். அவ்விதம் செய்ய உமக்கு எந்த உரிமையும் இல்லை. கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே. இப்படி யிருக்க கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்து கிறீர்கள்'' என்றான் (எண் 16:3). 86. பிறகு மோசே தனது தலையைத் திருப்பி அவ்விடத்தை கடந்து "கர்த்தாவே நான் என்ன செய்வேன்'' என்றான். 87. ''அவனிடத்திலிருந்து உங்களைப் பிரித்துக் கொள் ளுங்கள்'' என்று தேவன் கூறி பூமி அவனை விழுங்கிப்போகும்படி செய்தார். 88. இங்கு ஒரு மோதல் ஏற்பட்டதை கவனியுங்கள். ஆவிக்குரி யதும், மாம்சத்திற்குரியதும் ஒன்றையொன்று சந்திக்கும்போது அங்கு எப்பொழுதும் சச்சரவும் மோதலும் உண்டாயிருக்கின்றது. இயேசுவும் யூதாசும் சந்தித்தபோது, காயீனுக்கும் ஆபேலுக்கும் நிகழ்ந்தது போல மோதலுண்டாயிற்று. ஒருவர் தேவனுடைய குமாரன், ஒருவன் சாத்தானின் மகன். ஒருவன் சபையின் பொக்கிஷதாரியாயிருந்தான், மற்றவர் ஒரு போதகராக இருந்தவர். அதே போன்று இந்நாளிலும் அதே காரியத்திற்கு நாம் வருவோம். ஒன்று மாம்சீக ஸ்தானபம். மற்றொன்று ஒரு ஆவிக்குரிய கிறிஸ்துவினுடைய மணவாட்டி. ஆவிக்குரிய கிறிஸ் துவினுடைய மணவாட்டி மாம்சீக குழுக்களிலிருந்து மிகவும் வித்தி யாசப்பட்டவள். இவ்விரு குழுக்களுக்குள் ஒப்புமை காணுதல் என்பது இல்லவே இல்லை. 89. கவனியுங்கள்: இயற்கை எப்பொழுதும் ஆவிக்குரியவைக ளுக்கு ஒப்பனையாயிருக்கிறது, ஆனால் யாக்கோபு, ஏசா என்பவர்களின் விஷயத்தில் அது ஒரு வித்தியாசப்பட்டதாயிருக்கின்றது. நற்கிரியைகள் என்ற விதத்தில் பார்க்கும்பொழுது ஏசா, யாக்கோபைக் காட்டிலும் மனுஷர்களின் கண்களுக்கு முன் சிறப்பானவனாயிருந்தான். ஏசா, தன் வயது சென்ற கண் பார்வை மங்கின தீர்க்கதரிசியான தன் தகப்பனை ஆதரித்தான். இவ்விதம் மாம்சீக காரியத்தின் மூலம் சிலாக்கியம் பெற லாம் என்று நினைத்தான், தான் இன்னொருவருக்கு நன்மை செய்யும் காரியங்களின் மூலம் அதினுள் செல்லலாம் என்று எண்ணினான். அது சரியானதுதான். ஆனால் யாக்கோபோ, அவனுடைய முழு இருதயமும், அந்த புத்திரசுவீகாரத்தை அடைந்துக் கொள்வதிலே நோக்கமாயிருந்தது. அதனால்தான் தேவன் அவனை ஆவிக்குரியவனாக அங்கீரிகரித்தார். 90. கவனியுங்கள், அது எப்போதுமே மாம்சத்துக்குரியவன் ஆவிக்குரியவனை எதிர்க்க வகை செய்கிறது. அது, காயீன் ஆபேலையும், கோராகு மோசேயையும், யூதாஸ் இயேசுவையும் எதிர்க்கச் செய் கின்றது. அது இன்னுமாய் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது. தேவன் அங்கீகரித்த பலியைச் செலுத்தின ஆபேலை காயீன் ஆதி யிலேயே எதிர்த்து அழிக்க முயன்றான். அதே போல மாம்சீகம் ஆவிக் குரியதை எதிர்க்க வகை செய்கிறது. ஒரு தனி மனிதனின் சூழலையும், மற்றவை அனைத்தையும் அழிக்க வகை தேடுகின்றன. ஏனென்றால் அது பொறாமையே அன்றி மற்ற ஒன்றும் இல்லை. அது காயீனுக்குள் ஆரம்பித்து, பொறாமையே என்று நிரூபித்தது. இயற்கையும் (மாம்சமும்) ஆவிக்குரியதும் இக்காலத்தில் சந்திக்கும் போதும் இன்னமும் அது கிரியை செய்து கொண்டிருக்கின்றது. அது சாத்தான் என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் பொறாமையானது வேறு எவ்வழியிலிருந்தும் வராமல் சாத்தானிடத்திலிருந்து தான் வருகின்றது. பிறகு அது உண்மையை போலியாக்கி, யாரோ ஒருவர் தான் செய்ய நியமிக்கப்படாத காரியத்தை நடித்துக்காட்ட விழைகின்றது. அப்படிப்பட்ட நிறைய காரியங்களை இக்கடைசி நாட்களில் நாம் கண்டிருக்கிறோம். ஓ, என்னே, எவ்வளவு காரியங்கள், 91. தேவன் தம்முடைய ஆரம்ப வார்த்தையினின்று ஒரு போதும் மாறுவதில்லை. அவர் யாரை அழைக்கிறாரோ அவர்களை அபி ஷேகிக்கின்றார். யாரும் அவர் தெரிந்துக் கொள்ளப்பட்டவனின் இடத்தை களவாட முடியாது. ஒருவரும் மோசேயின் ஸ்தானத்தை தங்களுக்கென்று எடுக்கமுடியாது. எத்தனை கோராகுகள் எழும்பினாலும் எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் சரி, கர்த்தர் அழைத்தது அழைத் ததுதான். அது ஒருபோதும் மாறாது. 92. ஆனால், தேவன் தம்முடைய 'பரிபூரண சித்தத்தில்' ஜனங்கள் நடக்கவில்லையென்றால், தம்முடைய 'அனுமதிக்கும் சித்தத் தில்' (Permissive Will) அவர்களை நடக்க விடுகின்றார். அவ்விதம் அது நடை பெற அவர் அனுமதிக்கிறார். சரிதான்- ஆனாலும் அதையே தம்மு டைய பரிபூரண சித்தத்தின் மகிமைக்கென்று நடைபெறும்படி செய்து விடுவார். 93. உதாரணமாக: மாம்சீக உறவின் மூலம் (Through Sex) இந்த பூமியில் பிள்ளைகள் பிறப்பது தேவனுடைய பரிபூரண சித்தத்தில் ஆதியில் இருக்கவில்லை. இல்லை ஐயா! தேவன் மனிதனை மண்ணின்று உருவாக்கி அவன் நாசியிலே தம்முடைய சுவாசத்தை ஊதினார்; மனு ஷன் ஜீவாத்துமாவானான். பின்பு அவனின்று அவனுக்கு துணையாக ஒரு மனைவியை உண்டாக்குகிறார். இதுதான் தேவனுடைய மூலத் திட்டமாகும். ஆனால் பாவம் பிரவேசித்தபொழுது ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து அவளின் மூலம் சட்டப்பூர்வமாக பிள்ளைகள் பிறக்க தேவன் அனுமதித்தார். ''நீங்கள் இவ்விதம் தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்றிருப்பதால் உங்கள் வழியே சென்று பலுகி, பெருகி பூமியை நிரப்புங்கள்'' என்றார். ஆனால் அது எப்பொழுதும் தேவனு டைய பரிபூரணமான சித்தமாயிருக்கவில்லை என்பதை கவனியுங்கள். 94. ஆகவே, தொடங்கப்பட்ட எல்லாக் காரியங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. எல்லா பாவங்களும் ஒரு அழிவுக்குட்பட வேண்டும். எல்லா பாவங்களும் போக்கப்பட வேண்டும். ஆகவே முதலாம் உயிர்த்தெழுதல் வரும்போது அந்த மகத்தான அந்த ஆயிரம் வருட அரசாட்சியில் நாம் ஒருபோதும் நம்முடைய தகப்பனுக்கும் தாய்க்கும் திரும்பவும் பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தேவன் ஆரம்பத்தில் செய்ததுபோன்று, பூமியின் தூளிலிருந்து மனி தனை அவனுடைய துணையோடு கூட அழைப்பார். ஆம்! அதுதான் உண்மை . 95. இதினின்று தேவன் தம்முடைய சிந்தனையை ஒருபோதும் மாற்றுவதில்லை, நீ தொடர்ந்து நடக்க அனுமதித்து விடுவார். இந்த நீண்ட வழி தான் நான் இப்போது கூற விரும்புவதை கிரகித்துக் கொள்ள உதவும் அது. நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன், பாருங்கள்? தேவன் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தில் நடக்க உதவி உன்னை விட்டாலும், அதன் மூலம் சில ஆசீர் வாதங்கள் உனக்குக் கிட்டினாலும் அது தேவனுடைய பரிபூரண சித்தமல்ல. 96. கிருபையானது, ஏற்கனவே அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி யையும், அக்கினிஸ்தம்பத்தையும் பாவ பிராயசித்த பலியான ஆட்டுக் கடாவையும், விடுதலையாக்கும் வல்லமையையும், கொடுத்திருந்தாலும், இஸ்ரவேலரின் கூக்குரலினிமித்தம் தேவன் அவர்களுக்கு நியாயப் பிரமாணத்தைக் கட்டளையிட்டார். நியாயப்பிரமாணம் தேவனுடைய பரிபூரண சித்தமல்ல. ஆனால் மனிதன் அதை வாஞ்சித்தபடியால் அது அவனிடமாக பிரயோகிக்கப்பட்டது. அதனால் அவன் சாபத்திற்கு உள்ளானான். 97. தேவனுடைய பரிபூரண சித்தத்தை அடைவதே மிகவும் நல்லது. ஆகையால்தான் இயேசுகிறிஸ்து, ''உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப் படுவதாக'' (மத். 6:10) என்று நமக்கு போதித்தார். நாம் நம்மை தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கும், அவரின் வார்த்தைக்கும் ஒப்பு கொடுக்க வேண்டும். வார்த்தையைக் குறித்து கேள்வி கேட்காமல், அல்லது அதில் பல வழிகளை கண்டுபிடியாமல் அது சொல்லப்பட்ட வண்ணம் அதை ஏற்றுக்கொள். அநேகர் அவ்விதம் செய்ய முற்படுகின் றார்கள். நீ அவ்விதம் செல்வாயானால், ஒருவேளை தேவனுடைய ஆசீர்வாதத்தையும் கூட அதில் காணலாம். ஆனாலும், நீ தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தை செய்வாயேயன்றி அவருடைய பரிபூரண பரிசுத்த சித்தத்தை நிறைவேற்ற மாட்டாய். 98. தேவனே இதை அனுமதிக்கிறார், ஆனால் அது அவருடைய பரிபூரணமான சித்தமாய் இருக்கவிடுவதில்லை. இருந்தாலும் அதை தமது மகிமைக்கென்று கிரியை செய்ய அனுமதித்து தம்முடைய பரிபூரண சித்தத்தையே ஆசீர்வதிக்கிறார். மனித சேர்க்கையின் மூலம் புத்திர சந்தா னம் உண்டாவது அதற்கு ஓர் உதாரணம். 99. கவனியுங்கள். மோவாப் ஒரு தவறாய்ப் பிறந்த தேசம். மோவாபின் தகப்பனும், மகளும் விசுவாசிகளாயிருந்தனர். இது உண்மை , ஒரு ஆவிக்குரிய சிந்தையோடு இதை உவமானப்படுத்தினால் அங்கு ஸ்தாபனம் உருவாகி நிற்பதை உன்னால் பார்க்க முடியும். இந்தக் காரியத்தின் தொடக்கம் தவறாய் இருப்பதனால் அதன் முழுவதும் தவறாய் இருக்கிறது. ஒரு பனிக்கட்டி பந்தானது சுழல்வதுபோல் தொடர்ந்து இதுவும் தவறாகவே உருண்டு மேலும் மேலும் தவற்றிற்குள்ளாகிறது. நீ ஒரு தவறு செய்ய ஆரம்பித்து பின் மேலும் மேலும் தவறுகளைச் செய்துக்கொண்டே போகிறாய். 100. பெந்தெகோஸ்தேயின் அனுபவத்தோடு ஆரம்பித்த சபை ரோமாபுரியின் நிசாயாவின் சங்கத்திலே தவறு செய்ய ஆரம்பித்தது. அவர்கள் தங்களை ஸ்தாபித்தபொழுது, சபையினுள் எல்லா ஆடம் பரத்தையும், ஜெபமாலை உருட்டுவதையும், மரித்தவர்களுக்காக ஏறெ டுக்கும் ஜெபங்களையும் நுழைத்து ஒரு தவற்றிற்கு மேல் மற்றெரு தவறாக தொடர்ந்து செய்து அது இன்று வந்து விட்டிருக்கும் நிலை மையை கவனி. பெந்தெகோஸ்தேயின் ஒரு சிறு வாசனையும் அதில் இப் பொழுது வீசவில்லை. அது செய்ய வேண்டிய காரியம்மெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது தன்னை சுத்திகரித்துக் கொண்டு திரும்பவும் ஆதி நிலை மைக்கு செல்ல வேண்டுவதுதான். 101. மார்டின் லூத்தரின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நீதிமானாகும் உபதேசம் முன்னேற்றமடைந்து லூத்தரன் சபையாக இருந்திருக்க வேண் டும். லூத்தரன் தன்னை ஸ்தாபித்த பொழுது, வெஸ்லியின் பரிசுத்தமாகு தலை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. மனிதன் அதை தாங்க முடியவில்லையாகையால் ஆவியானவர் கடந்து சென்றுவிட்டார். 102. இப்பொழுது லோத்தின் குழு: அல்லது மோவாப் லோத்தின் குமாரத்தியினுடைய பிள்ளையாயிருந்து, தவறாய் ஆரம்பித்தது. இப் பொழுது கவனியுங்கள். மாம்சீக சபையைப்போன்று, மோவாப் மாம்சீக ஸ்தாபனத்திற்கும் உருமாதிரிமையாக இருந்தான். இஸ்ரவேல் ஆவிக்குரிய சபைக்கு அடையாளமாய் இருந்தாள். இஸ்ரவேல் ஆவிக்குரிய சபையாகவும், எகிப்திலிருந்து அழைக்கப்பட்ட அந்நாளின் மணவாட்டியாகவும், உண்மை என்று உறுதிப்படுத்தப் பட்டதாகவுமாய் இருந்தது. 103. கவனியுங்கள் மோவாபியரும், இஸ்ரவேலரும் ஒருங்கே வந்தார்கள். இருசாராரும் ஏழு பலிபீடங்களைக் கட்டி சுத்தமான காளை களை பலியிட்டனர். மோவாபியர், ஆட்டுக்கடாக்களை பலியிட்டு, வரப் போகிற மேசியாவிற்கு அடையாளமாக சாட்சி பகர்ந்தனர். அடிப்படை யாக இரு சாராரும் ஒருமிக்கக் காணப்பட்டனர். இஸ்ரவேலர் பள்ளத் தாக்கிலும், மோவாபியர் மலையிலும் தங்கியிருந்தனர். மோவாபிற்கு ஏழு பலிபீடங்களும், இஸ்ரவேலுக்கு ஏழு பலிபீடங்களும், மோவாபிற்கு ஏழு காளைகளும் இஸ்ரவேலுக்கு ஏழு காளைகளும், வரப்போகின்ற மேசியாவிற்கு அடையாளமாக மோவாபியரும் இஸ்ரவேலரும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் உடையவராயிருந்தனர். அடிப்படையாக இருவரும் எல்லாக் காரியங்களிலும் ஒருமைப்பட்டிருந்தாலும் ஒரு வித்தியாசமானது இருவருக்கும் இடையே காணப்பட்டது. அது என்ன? மோவாபினிடத்தில் தேவனுடைய வெளிப்படுத்தும் வல்லமை காணப் படவில்லை. அவர்கள் ஒரு தேசமாக, ஒரு ஆடம்பரமான கூட்டமாய் மட்டும் காணப்பட்டார்கள். ஆனால் இஸ்ரவேலுக்கோ, அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியிருந்தான். அவர்களோடு அடிக்கப்பட்ட கன்மலையும், அக்கினிஸ்தம்பமும், சரீரசுகத்திற்கு ஒரு வெண்கல சர்ப்பமும், உலாவும் தேவனுடைய ஆசீர்வாதமும் இருந்தன. அவர்கள் தேவனால் அழைக்கப்பட்ட ஜனமாயிருந்தார்கள் 104. இன்றுள்ள சபைகளுக்கு இது ஒரு சரியான உதாரணமாக இருக்கின்றதாய் நாம் காண்கிறோம். இஸ்ரவேலர் அக்கினி ஸ்தம்பம் எங்கெங்கு சென்றதோ அங்கெல்லாம் செல்லும் தேசாந்திரிகளாயிருந்த னர். ஆனால் மோவாபோ அப்படியில்லை. தங்கள் சொந்த ஸ்தாபனத்தில், சொந்த தேசத்தில் குடி அமர்ந்தவர்களாய், அவர்கள் அசையாத ஒரு தேசமாய், எங்கும் திரியாமல் தங்கள் ஆடம்பரங்களோடும் தங்கள் போர்வீரர்களோடும் தங்களுக்கு உத்திரவிடும் ராஜாவோடும், சகல சம்பிரதாயங்களோடும் தங்கியிருந்தனர். 105. ஆனால், மோவாபியர், தங்களிடம் இல்லாத ஒன்று இஸ்ர வேலரிடம் இருப்பதைக் கண்டனர். ஒரு பெரிய வல்லமையானது இஸ்ர வேலின் மத்தியில் ஒரு தீர்க்கதரிசியான மோசே என்பவன் மூலம் இருப்ப தைக் கண்டனர். ஒரு யுத்தமானது நடந்த பொழுது அது இஸ்ரவேலுக்கு அபஜெயத்தைக் கொண்டு வருமாப்போல் காணப்பட்ட பொழுது இஸ்ர வேலர் மோசேயின் கரங்களை உயர்த்திப் படித்தனர். அப்பொழுது யுத்த மானது மாறி இஸ்ரவேலருக்கு ஜெயத்தை கொடுத்ததை மோவாபியர் அறிந்திருந்தனர். இவ்விதமான வல்லமை தங்களிடம் இல்லாமையால் ஒரு அரசியலான காரியத்தின் மூலம், அதற்கு சரிசமமாயிருக்க முயற்சித்தார்கள். ஆகவே, அடுத்த நாட்டினின்று ஒரு தீர்க்கதரிசியை கூலி பேசி தங்களிடம் அழைத்து வந்து, இஸ்ரவேலைப் போலவே தாங் களும் வல்லமையுள்ளவர்களாயிருக்கும்படி தங்களை அமைத்துக் கொண்டனர். 106. உன்னால் இந்த மாம்சீகமான ஒப்பிடுதலைக் காண முடிகிறதா? இன்றுள்ள சபையின் மாம்சீகத்தை உன்னால் காண முடிகின்றதா? அது இதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறது. 107. கவனி! இப்பொழுது இரு சாராரும் தங்களுக்கு தீர்க்கதரிசி களை கொள்ளப் போகின்றார்கள். இதிலுள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், தேவனுடைய தீர்க்கதரிசியான மோசே, தேவனை தன்னுடைய ராஜாவாகக் கொண்டு, அவரிடமிருந்து தேவ கட்டளை களான தேவனுடைய வார்த்தையைப் பெற்றான். அவர்களின் தீர்க்க தரிசியான பிலேயாம், மோவாபியனான பாலாக்கை தனக்கு ராஜாவாகக் கொண்டு அங்கிருந்து தனது கட்டளைகளையும் ஆசிர்வாதங்களையும் பெற்றான். ஆகவே, பாலாக் பிலேயாமை அழைத்து, ''இங்கு வாரும், இந்த இஸ்ரவேலரை சபியும். ஏனெனில், இவர்கள் முழு உலகத்தையும் மூடிக் கொள்ளுகிறார்கள், ஒரு காளை நிலத்தின் புல்லை மேய்வது போல் எல்லாவற்றையும் மேய்ந்து கொள்ளுகிறார்கள்; நீர் ஆசீர்வதித்தால் ஆசீர்வாதம் உண்டாகும். நீர் சபித்தால் சாபம் உண்டாகும் என்று நானறிந்திருக்கிறேன். ஆகவே, எனக்காக இங்கு வந்து சபியும்'' என்று கூறினான். 108. இந்த பிலேயாம் ஒரு அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியா யிருந்தான் என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் தன்னுடைய புத்திர சுவீகாரத்தை அரசியல் காரணத்திற்கு விற்று போட்டான். இன்றைக்கும் லூத்தரன்களும், வெஸ்லியன்களும், பெந்தேகோஸ்தேயினரும் (Luther ans, Weslyans, Pentecostals) ஆகிய முழுக் கூட்டமும் இன்றைய சபை யும் ஸ்தாபனத்தின் இழுப்புகளில் சிக்கி தங்கள் புத்திர சுவீகாரத்தை விற்று போட்டுவிட்டனர். மோசேயும், பிலேயாமும் தேவனால் அழைக் கப்பட்டு ஆவிக்குரியவர்களாக காணப்பட்டாலும் அவர்களை நடத்தின தலைமையில் வித்தியாசத்தைக் கவனியுங்கள். மோசேக்கு தேவனும் பிலேயாமிற்கு பாலாக்கும் தலைவர்களாயிருந்தனர். 109. ஆவிக்குரியது. மாம்சமானது தவறு என்று எவ்வாறு நிரூபிக்கிறது என்பதை இங்கு கவனி; தேவனால் அனுப்பப்பட்டு அவருடைய ஊழியத்தின் உக்கிராண வேலையில் காணப்படும் தீர்க்கதரிசியான மோசே மற்றொரு தேவனுடைய தீர்க்கதரிசியினால் சவாலுக்கழைக்கப்படுகின்றான். இதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தேவன் ஆசீர்வதித்து தெரிந்துக் கொண்ட கூட்டத்தோடும், தேவனால் அனுப்பப்பட்டு தன்னுடைய ஊழியத்தில் காணப்படும் மேசே இந்த குளிர்ந்த பழக்க வழக்கத்தில் திழைத்த கூட்டமாகிய மோவாபியரினிடத்தில் வந்த போது இன்னொரு தீர்க்கதரிசியினால் சவாலிடப்பட்டான். இந்த இருசாராரும் தீர்க்கதரிசியினை உடையவர்களாயிருந்தனர், தேவன் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளோடும் பேசினார். இங்குள்ள வித்தியாசத்தை எவ்விதம் கண்டுக் கொள்வாய்? 110. தேவன் இதை செய்ய சொன்னார்; அதை செய்ய சொன்னார் என்று சிலர் கூறுகின்றார்கள். அதைக் குறித்து நான் ஏதேனும் கேள்விக் கேட்கவில்லை. ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு புறம்பாயி ருக்கும் பட்சத்தில் அதை கூறுகின்றவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தாலும் அது ஒரு காரியமல்ல. ஏனெனில் அவர் தேவனுடைய வார்த்தையின் பாதையினின்று வழி விலகியிருக்கின்றார். ஆகவே, அநேகர் இவ்விதம் ஏமாற்றப்படுகின்றனர். “ஓ! இந்த சகோதரனால் இதை செய்யக்கூடும்'' என்று கூறுகின்றார்கள். அவ்விதம் செய்தும் வார்த்தையை மறுதலிக் கின்றார்களே! 111. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசி னாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந் தாலும், எனக்கு உண்டான யாவற்றையும், நான் அன்னதானம் பண் ணினாலும், நான் ஒன்றுமில்லை'' (1 கொரி. 13:13) "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி; கர்த்தாவே! உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தி னோம் அல்லவா? உமது நாமத்தினால் அநேக அற்புதங்களைச் செய் தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்'' (மத். 7.22-23). இருந் தாலும் தாங்கள் இவை இவைகளை செய்தோம் என்ற அறிக்கையுடன் வருகிறார்கள். ஆனால் இயேசுவோ, அவர்களை அக்கிரமச் செய்கைகாரர் என்று அழைக்கிறார். அக்கிரமம் என்பது என்ன? இது நல்லது, இது தான் செய்யத் தகுந்தது என்று தெரிந்தும் அதை செய்யாமலிருப்பதுதான் அக்கிரமம் எனப்படும். கடைசி நாளில் என்ன நடக்கும் என்பதை பாருங்கள். 112. தேவனுடைய முழு வார்த்தைக்கும் செவி சாயுங்கள். இந்த தேவனுடைய முழு ஆலோசனையும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டு மென்பதே என்னுடைய அலுவலாயிருக்கின்றது. தேவன் தாம் தேவனாயிருப்பதற்கு தம்முடைய வார்த்தைக்கு உத்திரவாதமுள்ளவராய் இருக்க வேண்டியிருக்கிறது. 113. ஒவ்வொரு நாளும் புதிதாக அக்கினிஸ்தம்பம் மோசேக்கு முன்பாக நிற்க அவன் தேவனுடைய உக்கிராண ஊழியத்தில் காணப் படுகின்றான். தேவ ஆவியானவர் அவன் மேலிருந்தார். இங்கே இருக்கும் மற்றொரு ஆபத்தைக் கவனியுங்கள். பிலேயாம் தேவனால் அனுப்பப்பட வில்லையென்று யாரும் வாக்குவாதம் செய்ய இயலாது. ஏனெனில் தேவ ஆவியானவர் அவனிடமும் பேசினார். அவன் தீர்க்கதரிசியாவான். ஆனால், அவன் சரியான பதிலை தேவனிடத்தினின்று பெற்றபோது அதை கடை பிடிக்காமல் அதை கவனியாதவன் போலிருந்து விட்டான் என்பதைப் பாருங்கள். பின்புதான் மோசேயினிடம் சென்று சவாலுக் கழைக்கிறான். 114. இப்பொழுது பிலேயாம் தன் முழு இருதயத்துடன் தேவனு டைய சித்தத்தை நாடினான். இந்த பாலாக்கின் பெரிய மனிதர்கள் இவனி டம் வந்து பிலேயாமே! நீர் உடனடியாக வந்து இந்த இஸ்ரவேல் ஜனங் களை சபிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் பூமியிலே விசாலத்தை நிரப்பி எங்கும் சிதறி, எனக்கெதிராக பாளயமிறங்கி உள்ளனர். தங்களைச் சுற்றியும், புறம்பும் இருந்த எல்லா இராஜ்ஜியங்களையும் மடங் கடித்து நசுக்கியுள்ளனர். ஆதலால் நீ வந்து அம்மக்களை சபிக்கவேண் டும் என்று கூற பாலாக் ராஜா எங்களை அனுப்பி உள்ளார் ஏனென்றால் நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன், நீர் ஆசிர்வதிக்கிறவன் ஆசீர்வதிக் கப்பட்டவன் என்று நாங்கள் அறிந்துள்ளோம்” என்றனர். இவன் தேவனுடைய மனிதனும், ஊழியனாகவும் இருந்தான் என்று இப் பொழுது பாருங்கள். 115. பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாயிருந்ததனால், "இதில் தேவ னுடைய சித்தம் என்னவென்பதை நானறிய வேண்டும்'' என்று நினைத்தான். 116. அதுதான் ஒரு அழைக்கப்பட்ட தீர்க்கதரிசி செய்யும் காரியம். முதலாவது ஒரு தீர்க்கதரிசி என்ன செய்யவேண்டும்? அவன் தீர்க்கதரிசியாயிருப்பதனால் தேவனுடைய சித்தம் என்ன என்று தேட வேண்டும். தேவனுடைய வார்த்தை அவனிடம் வருகின்றது. அதைத் தான் அவன் நிச்சயமாக செய்யவேண்டும் ''நீ ஒரு வேதசாஸ்திரி அல்ல'' என்று அவர்கள் கூறலாம். ஆனால், ஒரு வேதசாஸ்திரியினிடத்தில் தேவ னுடைய வார்த்தை வருகிறது என்று வேதம் கூறவில்லையே! தேவனு டைய வார்த்தை தீர்க்கதரிசினியிடம் வருகிறது என்று வேதம் கூறுகிறது. இந்த வேதசாஸ்திரிகள்தானே வேதத்தைக் குழுப்புகின்றார்கள். 117. தேவனுடைய தீர்க்கதரிசியான ஒரு மனிதன் இங்கு இருக் கிறான். இவன் தேவனுடைய ஜனங்களைச் சபிப்பதற்கென்று கூலி பொருத்தப்பட்டபோது, தேவனுடய பரிபூரண சித்தத்தை நாடினான். தேவன் தமது பரிபூரண சித்தத்தை தெரியப்படுத்தினார். அது என்ன? "நீ அவர்களோடே போக வேண்டாம்” இதுதான் தேவனுடைய முதல் வார்த்தை "அவர்களோடே போக வேண்டாம், என்னுடைய பரிபூரண வழிகளில் நடக்கின்ற என்னுடைய ஜனங்களை தாக்க முனைய வேண் டாம்'' என்றார். 118. இன்றுள்ள நிலைமை எவ்வாறு உள்ளது? தேவ ஆவியான வர் உங்கள் நடுவில் கிரியை செய்து அதை நீங்கள் காணும்போது அதைக் குறித்து குறைகூறி, வாக்குவாதம் செய்கிறீர்கள். பல வருடங்களாக இந்த ஊழியத்தை குறைகூற வேண்டும் என்று முயற்சிக் கின்றார்கள்; ஆனால் எவ்வளவுக்கதிமாய் அது வளர்ந்துக் கொண்டிருக் கிறது. தேவன் ஆசீர்வதித்ததை நீ சபிக்க முடியாது, உன்னால் அது முடியாது. 119. ஆதலால், பாருங்கள், அவர்கள் தேவனுடைய ஜனங்கள். இப்பொழுது இத்தீர்க்கதரிசியானவன் ராஜாவினால் கூலி பொருத்தப்பட்டு எல்லா கொண்டாட்டங்களிலும், களியாட்டுகளிலும் இருந்தபோது, தேவனுடைய வார்த்தை அவனிடத்திற்கு வந்தது. அவன் தேவனுடைய சித்தத்தை நாடினான், தேவன் “இம்மக்களை சபிக்காதே, அவர்களை நான் ஆசீர்வதித்தேன்'' என்று அவனுக்கு பதிலுரைத்தார். 120. நாம் இங்கு நிகழ்த்தும் பிரசங்கம் உண்மையான தேவ வார்த்தையாக இருந்து, சரியான சமயத்தில் பிரசங்கிக்கப் படுகிறதென்பதை மறுதலிக்கும் ஒரு வேத சாஸ்திரியும் இந்த வானத்திற்கு கீழே இருக்கமுடியாது. இங்கு சொல்லப்பட்டு கிரியைகளில் வரும் காரியங்கள் எல்லாம் தேவனால் சரியென்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் இந்த தேவ வார்த்தையில் இதே காரியத்தைத் தான் பார்ப்பான். ஆனால் அவ்விதம் பார்க்கவில்லையென்றால் அங்கு ஏதோ கோளாறு உண்டு என்பதற்கு ஏது உண்டு. 121. "நான் ஏன் அதை எதிர்மாறாக எடுக்கக்கூடாது'' என்று நீ கேட்கலாம். அவ்விதம் பாலாக்கும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் தேவன் மோசேயுடன் இருப்பதை நிரூபித்தார். அதற்கு அத்தாட்சி தேவனுடைய வார்த்தை. அவன் தேவனுடைய தெளிவான பரிபூரண மான திட்டத்தை அறிந்தான். "நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களை சபிக்கவேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்''. ஆனால் ஆரம்பத்திலேயே, பிலேயாமுக்கு இஸ்ரவேலரை பிடிக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஓ! இன்றைய உலகில் எத்தனை பிலேயாம்கள் இருக்கின்றனர். 122. "போகாதே' என்ற தேவனுடைய பரிபூரணமான முடி வைக் கேட்டபிறகும், அதற்கு ஏற்ப செய்வதைவிட்டு, காயீனைப் போலும், கோராகைப் போலும் பொறாமையினால் உந்தப்பட்டு தன் சொந்த யுக்தியின்படி இஸ்ரவேலரை சபிக்க புறப்பட்டான். 123. கவனியுங்கள்; முதல்விசை தன்னை சந்தித்த தன்னுடைய ஸ்தாபன தலைமை அலுவலகத்தின் பிரமுகர்களுக்கு ''நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டேன் என்கிறார்'' என்று பிலேயாம் கூறியனுப்பிவிட்டான். அவன் அவ்விதமே அதிலே நின்றிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! ஆனால், அவனுடைய இருதயத்தின் ஆழத்தில் அந்த ஜனங்களை அறவே வெறுத்தான். ஏனெனில் அந்த ஜனங்கள் தன் கூட்டத்தை சார்ந்தவர்களாயிருக்க வில்லை. தன்னுடைய கூட்டத்தை சேர்ந்திராத எதுவும் சரியானது அல்லவென்று நிதானித்தான். பாருங்கள்? அவன் அவர்களைப் பார்த்து “இந்த அருவருப்பான ஜனங்களை பரிசுத்தமான தேவன் நிச்சயமாக சபிப்பார். அவர்கள் எங்களைப் போல் படிப்பு பெற்றவர்களல்ல, நாங்கள் புத்திசாலிகள், ஓ! தேவனைத் தொழுது கொள்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார், எகிப்தியர்களிடம் அடிமை களாக இருந்து மண்ணைப் பிசைந்தவர்கள். இப்படி விரட்டப்பட்ட ஒரு அசுத்த ஜனங்களிடத்தில் தேவனுக்கு ஒரு காரியமும் இராது'' என்று கூறினான். 124. அடிக்கப்பட்ட கன்மலையும், வெண்கல சர்ப்பமும், அக்கினி ஸ்தம்பமும் இஸ்ரவேலரின் நடுவேயுள்ளதை பிலேயாம் காணத் தவறினான். அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து அவன் நியாயந்தீர்க்க முற்பட்டான். கிருபையினால் வரும் தெரிந்து கொள்ளு தலின்படி அவர்கள் உன்னத அழைப்பினால் தேவனுடைய வார்த் தையில் இருப்பதைக் காணத்தவறிவிட்டான். இஸ்ரவேலரை சபிப்ப தற்காக தேவ ஆலோசனையை அவன் தேடினபோது தேவன் “அவ்வாறு செய்யாதே, அவர்கள் என்னுடையவர்கள். அவர்களைத் தனியே விட்டு விடு. அவர்களைத் தீண்டாதே'' என்றார். 125. ஆகவே, முதல்விசை வந்த மனிதர்கள் அவனைவிட்டு போய் விட்டனர். பிலேயாம் காரியத்தில் பின் வாங்கிவிட்டாலும் அவனுடைய தலைமை ஸ்தாபனம் என்ன செய்தது என்பதை கவனி யுங்கள். இரண்டாம் விசை அவர்கள் அதிகம் பிரசித்தப்பெற்ற பிர முகர்களை அவனிடம் அனுப்பினார்கள். ஒருவேளை இம்முறை வந்தவர்கள் முன் வந்தவர்களுக்கு வேறுபட்டிருக்கக் கூடும். சாதாரண பிரமுகர் களுக்குப் பதிலாக பெரிய டாக்டர் பட்டம் பெற்றவர்களும், அத்தியட்ச குருக்களும் ஆலோசனை சங்கத் தலைவர்களும் வந்திருக்கக்கூடும். தங்களுடைய திட்டத்தை விவரித்துக் காண்பித்து, அதினால் வரும் பலன்களைக் கூறி பிலேயாமை இணங்கச் செய்யும் அளவிற்கு படித்த ஒரு கூட்டமாயுமிருந்திருக்கலாம். 126. இதைதான் காயினும், கோராகும் செய்தார்கள். தங்கள் சொந்த யோசனையை தேவனுடைய வார்த்தையுடன் கூட்டினார்கள். நாங்கள் சுயபுத்தியை புறம்பாக்குகிறோம், தேவனில் நம்பிக்கை கொள்கிறோம்; யார் என்ன கூறினாலும் சரி அதைக் குறித்து கவலை இல்லை. தேவன் கூறுவதை குறித்து யூகித்து நாங்கள் உளவறிவதில்லை. நீ அவ்விதம் செய்யமுடியாது. விசுவாசத்தினால் தேவனுடைய வார்த் தையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் எவ்விதம் காரியங்களை செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் எதை சொன்னாரோ அதையே செய்கிறார் என்று விசுவா சிக்கிறேன். அதை தேவனுடைய வார்த்தை என்ற அடிப்படையில் நான் விசுவாசிக்கிறேன். 'உன்னால் அதனோடு நடக்க முடியாது'' என நீ கூறலாம், ''நான் எப்படி அதனோடு நடப்பேன் என்பதை நானறியேன்'', ஆனால் 'அதை சொல்'' என்று அவர் கூறினார். எனக்கு ஞாபகமிருக்கிறது, என்னடைய பாப்திஸ்து சபை போதகர் வந்து “ நீ ஆலயத்தின் தூண்களுக்குத்தான் பிரசங்கிக்கப் போகின்றாய், இப்படிப்பட்ட ஒரு பிரசங்கத்தை யாராவது கேட்பார்கள் என்று நினைக்கிறீரோ''? என்று கேட்டார். அதற்கு நான் "தேவன் அவ்விதம் கூறினார்'' என்றேன். "ஏழாவது நிலை படிப்பை வைத்துக்கொண்டு நீ எவ்விதம், ராஜாக் களுக்கு ஜெபம் பண்ணி உலகம் பூராவும் பிரசங்கிக்கப்போகிறாய்?” என்று கேட்டார். 127. அப்பொழுது நான் " எனக்கு தெரியாது நான் அவ்விதம் செய்யப்போகிறேன் என்று. ஆனால் நான் அவ்விதம் செய்வேன் என்று தேவன் கூறியிருக்கிறார்” என்று கூறினேன். மேலும் அவர் இந்த படித்த மகா உலகத்திற்கு எதிராக நின்றுக் கொண்டு தெய்வீக சுகமளித்தலையும், மற்ற காரியங்களையும் குறித்து பிரசங்கித்தால் அவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறாயா?; என்று கேட்டார். 128. அப்பொழுது நான் அவர்கள் விசுவாசிப்பார்களோ, விசுவாசிக்கமாட்டார்களோ என்பதை அறிய எனக்கு உரிமையில்லை. ஆனால் என்னுடைய கடமை பிரசங்கிப்பதேயன்றி வேறல்ல. அதை தான் அவர் எனக்கு கூறினார், அவர் என்னோடு இருப்பேன் என்றும் என்ன நடைபெறும் என்றும் கூறினார்'' என்றேன். அவர் என்ன நடை பெறும் என்று கூறினாரோ அவ்விதமே நடைபெற்றது. "முதலாவது அவர்களுடைய கரங்களை பிடி; பின்பு அவர்களின் இருதயத்திலுள்ள இரகசியங்களையும் நீ அறிந்துகொள்வாய்'' என்று கூறினார். நான் அதைக் குறித்து உங்களிடம் கூறியிருக்கிறேன். அது அவ்வாறே நடைபெற்றது. அது எவ்வாறு நடைபெற்றது என்பதை அறிவது எனக்கடுத்த வேலையில்லை. இன்னும் அது எவ்வாறு நடைபெறு கிறது என்பதை நானறியேன். எனக்கு தெரிந்ததெல்லாம் அது நடை பெற்றது, அவ்வளவுதான். 129. 'பின்பு கர்த்தருடைய வார்த்தை எலியாவிற்கு உண்டா யிற்று. அவர்: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய் , அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்கு கட்டளையிடுவேன் என்றார்” (1 இரா. 17:2-). இதை எவ்வாறு யாராவது விவரித்துக்கூற இயலும்? ஒரு காகமானது இறைச்சியையும், அப்பத்தையும் எவ்வாறு கொண்டு வந்திருக்கக் கூடும்? அது என்னுடைய விவரிக்கும் தன்மைக்கும் அப்பாற்பட்டது. நீயும் கூட அதை விவரிக்க இயலாது. அல்லது யாரும் விவரிக்க முடியாது. ஆனால் தேவன் அதைச் செய்தார். அதுமட்டும் போதுமானது. அதை தேவன் எவ்விதம் செய்தார் என்பதை ஆராய்வது எனது வேலை யில்லை. எவ்விதம் இந்த பூமியை சிருஷஷ்டித்தார்? எனக்கு தெரியாது. ஆனால் அவர் சிருஷஷ்டித்தார். எவ்விதம் தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பினார்? எனக்கு தெரியாது, அவர் செய்தார். எவ்விதம் அவர் உயிரோடு எழுந்தார்? எனக்கு தெரியாது, அவர் எழுந்தார். அவர் என்னை எவ்விதம் இரட்சித்தார்? எனக்கு தெரியாது, அவர் செய்தார். எவ்விதம் உன்னை இரட்சித்தார்? என்னால் உனக்கு சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் செய்தார். எவ்விதம் என்னை குணமாக்கினார்? எனக்கு எவ்விதம் இவைகளையெல்லாம் செய்தார் என்று தெரியாது. ஆனால் இவ்விதம் செய்வார் என்று வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஆகவே தம்முடைய வார்த்தைக்கு தேவன் கட்டுப்பட்டு இருக்கிறார். பிலேயாம் அதை அறிந்திருக்க வேண்டும். அவன் இன்னும் அதிகமாய் அறிந் திருந்தான். 130. இரண்டாம்தரம் பிலேயாமினிடத்திற்கு வந்த ராஜாவின் பிரமுகர்கள் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அவர்களுக்கு பல வரங்கள் இருந்தன. அது மட்டுமல்ல, பிலேயாமிற்கு அதிக பணமும் ஒரு நல்ல நிலைமையும் அவர்களால் கொடுக்கக்கூடும். "பிலேயாமே, இந்த ஜனக்கூட்டத்தை கடிந்து இந்த தேசத்தினின்று துரத்தி விடுவா யானால், நாங்கள் உன்னை சாதாரண ஊழியக்காரன் என்ற பதவியின்று உயர்த்தி இந்த ஸ்தாபனத்தின் ஒரு மாநிலத்திற்கே உன்னை அதிகாரி யாக்குவோம்'' என்று கூறியிருப்பார்கள். ஓ! அவர்கள் அவனுக்கு ஒரு நல்ல நிலைமையை வழங்க தீர்மானித்தார்கள். கவனியுங்கள்: இந்த வாக்குத்தத்தங்களை தன்னுடைய தேசத்தின் தலைவரிடமிருந்து பிலே யாம் பெற்றான். 131. ஆனால் மோசே, தன்னுடைய வாக்குத்தத்தங்களை எங்கி ருந்து பெற்றான்? பரலோக ராஜாவினிடத்திலிருந்து பெற்றான். ''நான் உன்னை அந்த தேசத்திற்கு அழைத்துச்செல்வேன். ஒருவரும் உனக்கு எதிராக நிற்கக்கூடாது. நான் உனக்கு முன்பாக குளவிகளை அனுப்பி அவர்களை இடது பக்கமும், வலது பக்கமும் விரட்டியடிப்பேன். நீ அந்த தேசத்தை சுதந்தரிப்பாய், அதை உனக்கு ஏற்கனவே கொடுத்து விட் டேன். அது உன்னுடையது, நீ போய் அதை சுதந்தரித்துக்கொள்” என்று கர்த்தர் கூறினார். இந்த சத்தத்திற்குதான் மோசே செவிகொடுத் தான். பிலேயாமோ, தன்னுடைய இருதயத்தில் பொறாமையுண்டாகும் வரை செவிகொடுத்து பின்பு தன் மதத்தலைவரிடத்திற்கு போனான் 132. "உனக்கு உத்தியோகம் உயர்வு அளிக்க என்னால் முடியும் என்பது தெரியுமா? உன்னை நான் நல்ல இடத்திற்கு உயர்த்தி அநேக காரியங்களை உனக்குச் செய்வேன். உன் சம்பளத்தை உயர்த்தி நல்ல கூலியைக் கொடுப்பேன் என்று அந்த மதத்தலைவன் கூறினான். கவனி யுங்கள், நல்ல நிலைமை. இவையெல்லாம் அவனுக்கு வாக்களிக்கப் பட்டபோது, பிலேயாம் அதற்கு செவிமடுத்து கண்சொருகி குருடாய்ப் போனான். 133. ஒரு நல்ல நிலைமைக்காகவும், பகட்டான ஆலயத்திற் காகவும், அல்லது ஏதாவது கிடைக்கும் என்ற காரணத்திற்காகவும் ஜீவிக் கின்ற எத்தனை பிலேயாம்கள் இன்றைய உலகில் காணப்படுகின்றனர். தேவனுடைய வார்த்தைக்கும் அவரின் கிரியைகளுக்கும் தன் கண்கள் திறக்கப்பட்ட ஒரு நல்ல மனிதன், தன் செல்வாக்கினால் நல்ல சபை யாரைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஒரு தேவ ஊழியக்காரனாக புறப்படுகிறான். சிறிது காலம் சென்ற பின்பு, பரிசுத்த ஆவி யின் அபிஷேகம் பற்றியும், வார்த்தையின்படியான ஒரே ஞானஸ் நானமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப் படும் முறைமையைப் பற்றியும் அவன் முன்பாக வைக்கப்படும் பொழுது, அவன் இருப்பதான ஸ்தாபனமானது, எங்கே இந்த நல்ல ஊழியக்காரனை தாம் இழந்துவிடுவோமோ என்று அறிந்து அவனுக்கு ஒரு நல்ல நிலைமையையும், ஒரு நல்ல மாற்றத்தையும் சபையில் கொடுக்க முன் வருகிறது. ஆதியில் இருந்த அதே பிலேயாமின் கொள்கை சரியாக திரும்பவும் வருகிறதைப் பாருங்கள். 134. அது சத்தியம்தான் என்று அறிந்தாலன்றி அந்த மனிதன் அதை வேதத்தில் படித்திருக்க மாட்டான். ஏனெனில் பட்டப் பெயர்களான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை உபயோ கித்து யாரும் ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, அது ஒரு கத்தோலிக்க போதகம், வேத போதகம் அல்ல, அல்லது கடைசி அப்போஸ்தலன் மரித்தபின் 300 ஆண்டுகள் வரையிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தான் ஞானஸ்நானம் கொடுத்தனர், கத்தோலிக்க சபைதான் அதை ஆரம்பித்தது. மற்றவர்கள் அதை பின்பற்றினர். எந்த ஊழியக்காரனும், வார்த்தையை ஆராய முற்பட் டால் அது சத்தியம் என்று அறிந்துகொள்வான். ஆனால் புகழ்ச்சிக் காகவும், தன் நன்நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அல்லது ஜனங்கள் மத்தியில் ''நல்ல மனிதன்'' என்ற பெயரை வாங்குவதற்காகவும் அவன் ஜனங்களோடு இணங்கிப் போகிறான். "ஆனால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தாரே” என்று நீ கூறலாம். 135. அதுதான் சரி. சிலருக்கு சுகமாக்கும் வரங்கள் இருக்கலாம். சிலருக்கு மகத்தான கூட்டங்கள் இருக்கலாம். ஆனாலும் உனக்கோ அல்லது வேறு யாருக்கோ தேவனுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் அதே பதில்தான் அவர்களுக்கு கிடைக்கும். தேவன் மாறுகிறவர் அல்ல. இதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? 136. பிலேயாம் தனக்கு வர இருக்கும் ஒரு நல்ல நிலைமையை யோசித்தான். ராஜாவினிடத்தினின்று இரண்டாம் விசை அனுப்பப்பட்ட அந்த நல்ல தூதர்கள் அவனிடம் வந்தபோது, "தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு நான் கூறினேன். என் சமூகத்தை விட்டு புறப்பட்டு செல்லுங்கள். இது கர்த்தர் சொல்லுகிறதாவது'' என்று பிலேயாம் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவனோ, தனக்கு வரும் புகழ்ச்சியையும் வெகுமதிகளையும் நோக்கலானான். 137. பலர் இதை செய்ய எவ்வளவு ஆசைப்படுகிறார்கள்! "உன்னை உலகம் முழுமைக்கும் நாங்கள் அனுப்புகிறோம்; உனக்கு ஒரு விசேஷ ஆகாய விமானத்தை கொடுக்கிறோம், நீ எங்கு சென்றாலும் உன்னுடைய கூட்ட ஒழங்குகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம், ஆனால் நீ மட்டும் சற்று இணங்கினால்...'' என்று கூறுவார்கள். ஓ... இல்லை! தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்று எங்களுக்கு தெரியும். எப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், எவ்வளவு ஊதியம் கொடுக்க ஆயத்தமானாலும் சரி, எங்களுக்கு கர்த்தர் சொல்லு கிறதாவது மட்டும் வேண்டும். பாருங்கள்? தேவ ஒத்தாசை கொண்டு அதில் மட்டும் நிலைத்து இருக்கப்போகிறோம். பாருங்கள்? வார்த்தை என்ன கூறுகின்றது என்பதை நாம் அறிவோம். தேவன் என்ன கூறினார் என்பது நமக்குத் தெரியும். அது எப்படிப்பட்ட வாக்காய் இருந்தாலும் சரி, எவ்வளவு ஊதியம் அளித்தாலும் சரி, அல்லது இது, அது, என்று நீ எதை உற்பவித்தாலும், எங்களுக்கோ கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே தேவை. அவர் கூறினதே எங்கள் முதலிடம். "நல்லது. அது இரண்டாவதுதான்," என்று சபை சொல்கிறது. ஆனால் ஆதியிலே தேவன் எதைக் கூறினாரோ அதுதான் நாங்கள் விரும்புவது, அதிலிருந்து ஒன்றை எடுக்கவோ, அல்லது ஒன்றை கூட் டவோ கூடாது. ஏனென்றால் அப்படிச் செய்பவர்களின் பெயர்களை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவதாக வேதம் கூறுகிறது. சபை என்ன சொல்லுகிறதென்றோ, அல்லது டாக்டர். ஜோன்ஸ் என்ன கூறுகிறார் என்றே எங்களுக்குக் கவலையில்லை, எங்களுக்கு வேண்டு வதெல்லாம் கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதே; வார்த்தை என்ன சொல்கிறது என்பதே. 138. இங்கே, தேவனுடைய ஒரு ஊழியக்காரனான பிலேயாம், இன்னும் அவனைப் போன்ற அனேகர் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தையைப் பேசுகின்றனர். ஆனால், முழு சத்தியத் திற்கு வரும்போது அவர்கள் அதை செய்யமாட்டாதவர்களாயிருக் கின்றனர். 139. இங்கு கவனியுங்கள், தேவனுடைய தீர்க்கதரிசியான பிலேயாம் முதலாவதாக அத்தகைய ஒரு கூட்டத்தினர் மத்தியில் அகப்பட்டிருக்கக் கூடாது. இரண்டாவது அவர்களோடு அவன் சென்றிருக்கவும் கூடாது. கவனியுங்கள்! ஒரு புறம் புகழ்ச்சி, மறுபுறம் அவனுடைய மனசாட்சியின் நிமித்தம் ''நீங்கள் இன்று இரவும் தங்கி யிருங்கள், நான் திரும்பவும் கர்த்தரிடத்தில் முயற்சி பண்ணுகிறேன்'' என்று பிலேயாம் கூறினான். 140. இதில் திரும்ப முயற்சி பண்ணவேண்டுவதென்ன? அவன் என்ன சொல்ல வேண்டுமென்பதை தேவன் ஏற்கனவே உரைத்து விட்டார். ''நீ அவர்களோடு போகவேண்டாம், நான் ஆசீர்வதித்ததை நீ சபிக்க வேண்டாம்” என்று கர்த்தர் கூறினார். அதுவே மூல வார்த்தை. தேவன் ஏதாகிலும் கூறினால் அதுவே அவரின் குறிக்கோளாகும். அதற்கு மாறாக தன் சிந்தயை அவர் மாற்றுவதில்லை. யார் எதைச் சொன்னாலும் சரி, அவர் அதிலே நிலைத்திருக்கிறார். 141. இங்கு பிலேயாம் இன்னும் சற்று அறிந்திருந்தால் நலமா யிருக்கும். அத்தகைய கூட்டத்தாரோடு அவன் தன்னை பிணைத்திருக் கக் கூடாது. "என்னால் அதை செய்யமுடியுமென்பது உனக்குத் தெரியும் அல்லவா. நான் ஒரு பிஷப், கண்காணி; என்னால் என்ன வேண்டு மானாலும் செய்யமுடியும். ஆதலால் நீ எனக்கு அக்காரியத்தை செய் வாயானால், உனக்கு உயர்ந்த ஸ்தானத்தை அளிப்பேன்'' என்ற ராஜாவின் மேலான வார்த்தைகளும், வெகுமதிகளும் உயர்ந்த ஸ்தானத் திற்குரிய வாக்குறுதிகளும் அவனை கவர்ந்திழுத்தது. ஆனால் தேவன் அதைச் செய்யாதே என்று உறுதியாகக் கூறிவிட்டார். 142. ஆனால் பிலேயாமோ ''நீங்கள் இன்றிரவு முழுவதும் தங்கி யிருங்கள். நான் மறுபடியும் முயற்சி செய்கிறேன்'' என்றான். பாருங்கள்! அவனிடம் வார்த்தை இருந்தது. தேவனிடத்தில் வார்த்தையுள்ளது. நீ அதை குறித்து தர்க்கிக்காதே; ஏனெனில் தேவன் உரைத்து விட்டார். அவ்விதமான கூட்டத்தார் எப்பொழுதும் உன்னை தேவனுடைய சித் தத்தைவிட்டு வழுவிப் போகமளவும் பேசுவார்கள். 143. ஒரு சமயம் ஒரு கூட்டம் யோபு என்னும் தீர்க்கதரிசியிடம் வந்து அவனை மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால் எது சத்தியமோ அதைக் குறித்து தீர்க்கதரிசி தரிசனமாக பார்த்தான். அதனால் அவனை அவர்கள் மேற்கொள்ள இயலவில்லை. பிலேயாம் தரிசனம் பார்த்தும் அதில் நிலைத்திருக்கக் கூடாதவனாயிருந்தான். 144. “யோபே, நீ இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்,'' என்று எவ்வளவாய் அவனது சபையைச் சேர்ந்த குழுக்கள் கூறின போதிலும், அவனுடைய மனைவியும் அவனை நிந்தித்த போதிலும், "நீ பைத்தியக்காரி பேசுவது போல பேசுகிறாய்; தேவன் சொன்னது எனக்கு தெரியும், அவருக்கு எது தேவையோ அதை தான் நான் செய்தேன்'' என்றான். அவன் சொன்னதின் பேரில் சார்ந்திருந் தான் பாருங்கள்! 145. ''கர்த்தரிடம் திரும்பவும் விசாரிக்கிறேன்'' என்று இரண் டாந்தரமான காரியத்தை பிலேயாம் தன் மனசாட்சியின் காரணமாக உபயோகித்ததை கவனியுங்கள். எத்தனை பிலேயாம்கள் இன்றைய உலகில் தங்கள் மனசாட்சிக்காக மத்தேயு 28:19ஐயும், மல்கியா 4ம் அதிகாரத்தையும், லூக்கா 17:30ஐயும் உபயோகிக்க விரும்புகின்றனர். அவர்கள் இக்காரியங்களில் குழப்பமுற்றிருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன். 146. "ஒருவேளை கர்த்தர் இந்த விஷயத்தில் குழப்பமுற்றிருக்க லாம். ஆகவே நான் திரும்பவும் அவரிடம் விசாரித்து பார்க்கிறேன்'' என்று பிலேயாம் கூறியிருக்கலாம். கர்த்தர் இருதயங்களின் ஆழத்தை அறிந்தவராயிற்றே! பிலேயாம் இந்த இரண்டாந்தரமான வார்த்தையை தன்னுடைய சொந்த மனசாட்சியினிமித்தமாக உபயோகித்தான். ஏனெ னில் அவனுக்கு அதிகப்படியாக கூலியும், புகழும், நல்ல நிலையும் ஜனங்களால் 'உயர்திரு. டாக்டர் இன்னார்... இன்னார்...'' என்று அழைக் கப்படுவதையும் விரும்பினான். ஆதலால் திரும்பவும் முயற்சி செய்கி றேன் என்று கூறினான். 147. ஓ! இதைப் போல பிலேயாம்கள், வாக்குறுதி செய்யப்பட்ட ஒரு நல்ல நிலைமைக்காகவும், புகழ்ச்சிக்காகவும், தங்கள் மனசாட்சியை மரத்துப் போக பண்ணுகிறார்கள், இதற்கு காரணம் அவர்கள் சேர்ந்துள்ள ஸ்தாபனம்தான். ''நீ சத்தியத்தை பிரசங்கித்தால் நிச்சயம் வெளியே அனுப்பப்படுவாய். நீ நல்ல மனிதன்தான். நாங்கள் உன்னை நேசிக்கி றோம். ஆனால் அதை மட்டும் செய்யாதே என்றும் உயர்திரு. அத்தி யட்சகர் கூறின உபதேசம்தான் நம்முடைய மூல உபதேசம். அதிலேதான் நாம் நிலைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கப் பிரியமானால் நீ எங்க ளோடு இருக்கலாம். இல்லையென்றால் உனக்கு மிகுந்த கஷ்டம் உண் டாகும். உனக்கு உத்தியோக உயர்வு நாங்கள் கொடுக்க முடியாவிட் டாலும் வேறே சபைகளுக்கு உன்னை மாற்றுதல் செய்து விடுவோம்” என்றெல்லாம் ஸ்தாபன தலைவர்கள் கூறுகின்றனர். ஓ! பிலேயாமே! தேவனுடைய சித்தம் இன்னதென்று தெரிந்து நீ அதற்கு ஏற்றப்படி செய். தேவன் தம்முடைய சிந்தையை மாற்றி கொள்வது கிடையாது. 148. தன்னுடைய செயலுக்காக அவன் சத்தியத்தை புறம்பாக்கு கிறான். ''நான் மறுபடியும் முயற்சி செய்கிறேன்'' என்று கூறுகிறான். அங்கிருக்கும் பிலேயாம்களை கவனியுங்கள். 149. இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள். பிலேயாம் தனது மகத்தான களியாட்டங்களுடன் இரண்டாம் விசை தேவனிடம் சேர்ந்த பொழுது, அவனுடைய மனசாட்சி ஏற்கனவே மந்தப்பட்டு மரத்து போயிருந்தது. தேவன் அவனைப் போகவிட்டார். தேவன் தம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தில் (Permissive will) அவனுக்கு உத்தரவு கொடுத்தார். பிலே யாம் தன் காரியம் கிரியைக்கு வரவில்லை என்று துரிதமாகக் கண்டு கொண்டான். 150. பிலேயாமின் இருதயத்தில் இருந்ததை தேவன் அறிந்தி ருந்தார். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பினும் அவன் இஸ்ரவேலரை, பரிசுத்த உருளைகளை வெறுத்தான் என்றும், அவர்களை சபிக்க அவன் பிரியம் கொண்டான் என்றும் கர்த்தர் அறிந்துகொண்டார். அவர்களைச் சபிக்கக்கூடாதென்று பிலேயாமிடம் தேவன் கூறியிருந்தார். ஆனால் அவனோ அதைச் செய்ய விரும்பியபடியால், தேவன் அவனை அனுப் பினார். தேவன், ''நீ முன்னே போ,'' என்றார். நீங்கள் ஞாபகங் கொள் ளுங்கள். தேவன் தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றவில்லை. 151. பக்தி வைராக்கியம் படைத்த மூடர்கள் என்று அவன் பாவித்த அம்மக்களை சபிக்க விரும்பினான் என்பதை கவனியுங்கள். ஒரு நல்ல நிலையை அடைய அவன் விரும்பினான். ராஜாவின் சமூகத்தில் ஒரு நல்ல காரியம் செய்யவும், அதனால் தனக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் அவன் அதை செய்தான். ஆனால், தேவன் தம்முடைய வார்த்தை யையோ, தம்முடைய சிந்தையையோ ஒருபோதும் மாற்றிக் கொள்ள வில்லை. தேவன் உன் விருப்பப்படி கொடுப்பார் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இது உங்களுக்கு தெரியுமா? உன் இருதயத்தின் விருப்பத்தைக் கொடுப்பதாகவே தேவன் வாக்களித்துள்ளார். ஆகவே, உங்களுடைய விருப்பம் தேவனுடைய சித்தமாய் அமையட்டும். ஆனால் அது ஒருபோதும் உங்களுடைய சுயசித்தமாயிருக்க வேண் டாம். நீங்கள் ஏதாகிலும் அவரிடம் கேட்டு, அவர் உங்களுக்கு அதை தரவில்லை யென்றால் "நன்றி கர்த்தாவே, நீர் எனக்கு நல்லவைகளை கொடுக்க அறிந்திருக்கிறீர்” என்று கூறுங்கள். 152. எசேக்கியா ராஜாவை பாருங்கள். தேவனுடைய தீர்க்கதரிசி அவனிடம் வந்து, ''நீ மரிக்க போகிறாய். ஆகவே உன் வீட்டுக் காரி யங்களை ஒழுங்குப்படுத்து என்று கர்த்தர் சொல்லுகிறார்'' என்று கூறின பொழுது, எசேக்கியா தன் முகத்தை சுவற்றின் புறமாய் திருப்பி, ''கர்த் தாவே, நான் உமக்கு முன்பாக உத்தமனாய் நடந்தேன். ஆகவே என்னை நினைத்து 15 வருடம் கூட்டித் தாரும்" என்று கேட்டான். 153. கர்த்தர் திரும்பவும் தீர்க்கதரிசியிடம், "சரி... நீ போய் அவ னிடம் சொல். நான் அவனுடைய ஜெபத்தை கேட்டேன்'' என்றார். பின் எசேக்கியா என்ன செய்தான் என்பது தெரியுமா? முழு இஸ்ரவேல் நாட் டிற்கும் அவன் அவமதிப்பை கொண்டு வந்தான். தேவனுடைய கோபத்தை அவன் கிளரி அவனை அவர் கொல்லத்தக்க அளவு பின்மாறிப் போனான். அது சரி. ஒரு ராஜ்ஜியமானாலும், ராஜாவானாலும், அல்லது யாராயிருந்தாலும் சரி தேவன் சொன்ன முதல் காரியத்தை எடுத்துக் கொள்வதுதான் நல்லது. 154. பிலேயாம் என்னும் தீர்க்கதரிசியினிடம் அது மிகவும் கடினமாக இருந்தது. தேவனுடைய சித்தம் என்னவென்று அவன் அறிந்திருந்தும், கடினமுள்ளவனாகி தன் காரியத்தை நிறைவேற்ற போனான். ஆனால் என்ன சம்பவித்தது? தேவன் தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை. அவன் இருதயத்தை அவர் அறிந் திருந்தார். 155. தோமா ஒரு சமயம் நடந்த வர்த்தமானத்தை விசுவாசிக்க வில்லை, ''நான் என் கையை அவர் விலாவில் போட்டு, ஆணிகளால் உண்டான காயத்தில் என் விரலையிட்டால்தான் நம்புவேன்'' என்று கூறினான். அதற்கு அவர் “தோமா, இங்கு வா, உன் கையை இங்கு வை'' என்றார். ஓ!..." என் ஆண்டவரே, என் தேவனே'' என்று தோமா கதறினான். 156. அதற்கு இயேசு, “தோமாவே நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய்; காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கிய வான்கள்'' என்றார். ஜனங்கள் சில சமயங்களில் அந்நியபாஷை பேசினால்தான் பரிசுத்த ஆவியை பெற்றதாக எண்ணுகிறார்கள். அந்நிய பாஷை பேசுவதில் எனக்கு நம்பிக்கையுண்டு. தேவன் நல்லவர், அவர் உன்னுடைய இருதயத்தின் ஆசையை பூர்த்தி செய்வார். ஆனால் நீ எவ்வளவுதான் அந்நியபாஷை பேசியும், தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதினால் நீ தவறாகவே இருக்கிறாய். பாருங்கள்? நீ தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும்பொழுது, நீ அந்நிய பாஷை பேசுகிறதினால் அல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த் தையையும் உன் ஜீவியத்தில் கடைபிடிப்பதுதான் பரிசுத்த ஆவி யின் அபிஷேகம் பெற்றதற்கு அடையாளமாகும். பாருங்கள்? 157. நீ ஊக்குவிக்கப்பட்டு ஒரு புதிய பாஷையைப் பேசலாம் அதை நான் விசுவாசிக்கிறேன். நானும் கூட அதை அடைந்திருக்கிறேன். அது சத்தியமென்றும் நானறிவேன். ஆனால் அதுதான் நீ தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளை என்பதற்கு அடையாளமல்ல. நிச்சய மாகவே இல்லை. பாருங்கள்? "அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர் களுக்குச் சொல்லுவேன்'' என்று இயேசு கூறினார். 158. நீ அன்னிய பாஷை பேசி, பின்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதை மறுதலிக்கிறாயா? அல்லது தேவனுடைய மற்ற எந்த கட்டளைகளையும் மறுதலிக்கி றாயா? அப்படியென்றால் எங்கேயோ உன்னிடம் தவறிருக்கிறது. உன்னுடைய சொந்த மனசாட்சியை சற்று ஆராய்ந்து பார்த்து தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறதென்றும் பார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய பட்டப் பெயர்களில் யாராவது ஒருவர் ஞானஸ் நானம் பண்ணப்பட்டதை எங்காவது உனக்கு காண்பிக்கக்கூடுமோ? அது அவ்வாறு எங்கும் இல்லை. உன் மனசாட்சியை சமாதானப்படுத்து வதற்காக சில சமயங்களில் நீ அவ்வாறு செய்கிறாய். ''பெண்கள் எவ்விதம் நடந்துகொள்ளவேண்டும், குறைவான ஆடைகளை உடுத்தக் கூடாது" என்றெல்லாம் தேவன் கூறும்போது, என் சபை போதகர் அதைப்பற்றி ஒன்றும் குறை கூறவில்லை என்று கூறி, நீ சுலபமான வழியைத் தெரிந்து கொள்கிறாய். 159. தேவன் என்ன சொல்கிறார் என்பதைக் குறித்து அவர் களுக்கு நிச்சயமாகத் தெரியும்! பாருங்கள்? ஆனால் அதற்கு மாறாக செய்ய விரும்புகிறார்கள். ஒரு சாக்குபோக்கு அதற்கு கண்டு பிடிக் கிறார்கள், "ஆண்களுக்குரிய ஆடையை பெண்கள் உடுத்தக் கூடாது, அது எனக்கு முன்பாக அருவருப்பானது'' என்று தேவன் கூறினார். ஆகவே அது தவறு என்று காண்கிறோம். ஆம், நீங்கள் அதைச் செய் யக் கூடாது. இல்லை . பாருங்கள்? ஆகவே அது தவறானது. 160. "தேவன் என்னை இதை செய்ய சொன்னார்'' என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள். அவர் உன்னிடம் பேசவில்லை என்று நான் கூறுகிறதில்லை. ஆனால் இங்கு கவனி, அது தேவனுடைய பரிபூரண சித்தமல்ல, அது அவருடைய அனுமதிக்கும் சித்தம், அப்படிப்பட்டக் காரியம் என்ன செய்யும் என்று உனக்குத் தெரியுமா? ஒரு முழு கூட் டத்தையுமே அது கறைபடுத்திவிடும். அது முழுபாளையத்தையே கறை படுத்தினது. 161. தேவன் ஒருபோதும் தம் சிந்தையையோ, தம் வார்த்தை யையோ மாற்றுவதில்லை. அவர் நல்லவராயிருந்து, உன் இருதயத்தின் விருப்பத்தை, அது அவரின் சித்தத்திற்கு விரோதமாக இருந்தாலும் அதை அருளிச் செய்கின்றார். அதை நீ விசுவாசிக்கின்றாயா? இங்கு கவனி. தேவன் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசேயிடம் ''நீ அந்த கன்மலையிடம் சென்று பேசு'' என்றார். அந்தக் கன்மலை ஏற்கனவே அடிக்கப்பட்டிருந்தது. 162. ''கலகக்காரரே கேளுங்கள், உங்களுக்கு இந்த கன்மலையி லிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டு தரம் அடித் தான்''. மோசே தன் கோபத்தினிமித்தம் அக்கன்மலையை அடித்தான். முதல் விசை அடித்தபோது தண்ணீர் வரவில்லை. இரண்டாம் விசை அடித்தபோது தண்ணீர் புறப்பட்டு வந்தது. அவ்வித காரியம் தேவ னுடைய சித்தத்திற்கு எதிராயிருந்து தேவனுடைய எல்லா திட்டத் தையும் உடைத்துவிட்டது. கிறிஸ்துவானவர் ஒரு விசைதான் அடிக்கப் பட வேண்டும். ஆனால் இங்கு இரண்டு விசை அடிக்கப்பட்டு விட்டார். ஆகையால்தான் அது வேதத்தின் எல்லாத் திட்டத்தையும் தவிடு பொடி யாக்கிவிட்டது. ஆனால் தேவன் அதை தம் அனுமதிக்கும் சித்தத்தில் கணக்கிட்டார். 163. பின்பு கர்த்தர் மோசேயிடம், "மோசே இங்கு உயரே வா, நீ இம்மட்டும் உண்மையுள்ளவனாயிருந்தாய், "ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்ணைப் போல், '' நீ ஏறினாய். பாருங்கள். வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தை இங்கிருந்து பார்! "ஓ, ஆண்டவரே,'' நீ அதில் பிரவேசிப்பதில்லை. நீ என்னுடைய அனுமதிக்கும் சித்தத்தை கன்மலையண்டை நடப்பித்தாய், உன்னை மகிமைப்படுத் தினாய், என்னையல்ல, உன்னைப் பரிசுத்தப்படுத்தினாய் என்னையல்ல, நான் உனக்கு கற்பித்த மூல வார்த்தையை நீ காத்துக் கொள்ளவில்லை'' என்று கூறினார். இருந்தபோதிலும், தண்ணீர் வரத்தான் செய்தது. நீ வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து அவர்கள் சுகமாகலாம், நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அந்நியபாஷை பேசலாம், ஆனால் தேவனு டைய மூல உபதேசத்தைக் கைக்கொள். அவர் ஒரு போதும் தம் சிந்தையி னின்று மாறுவதில்லை. நண்பனே, நீ நிச்சயமாக அவருடைய சித்தத் தையும், கட்டளைகளையும் கைக்கொள்ள வேண்டும். ஓ! அது அவரு டைய சீஷர்களுக்குத்தான்” என்று நீ கூறலாம். 164. அவர் மாறாதவர், அவருக்கு சீஷர்கள் என்று இருக்கு மட்டும், கட்டளைகளும் ஒன்றுகூட மாறுவதில்லை. "நீங்கள் உலகமெங் கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்; விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும் அடையாளங்களாவன'' என்ற கட்டளையை கொடுத்தார். இது ஒருபோதும் மாறுவதில்லை. அவரால் ஒருபோதும் மாறமுடியாது. "அந்தக் கட்டளை இந்த நாளுக்குரியதல்ல'' என்று நீ சொல்லலாம், ஓ! அப்படியானால் நீ ஒரு பிலேயாமின் சீஷன். பாருங்கள்! தேவன் மாறுவதில்லை "அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 165. இன்றைய பிலேயாம்களை பாருங்கள் "ஓ, வேதத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்தான் ஞானஸ்நானம் கொடுத்திருக் கிறார்கள். ஆனால் எல்லோரும் வேறுவிதம் கொடுக்கிறார்களே'' என்று கூறுகிறார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை குறித்து எனக்கு கவலையில்லை. வானத்தின் கீழே பூமியின் மேலே நாம் இரட்சிக்கப்படும்படி கர்த்தராகிய இயேசுவின் நாமமேயல்லாமல் வேறெதினாலும் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை. நீ எவ்வளவு நல்லவனாக இருந் தாலும் சரி, அல்லது எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தாலும் சரி, அது ஒன்றுக்கும் உதவாது. தேவனுடைய மூல வார்த்தையில் நீ சார்ந்து இருக்கவேண்டும். அதுவே சரியானதாகும். 166. பலியைப் பார்க்கிலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ் படிதல் உத்தமம் என்பதை அறியீர்களா? சவுலின் வர்த்தமானத்தை நினைவு கூறுங்கள். 167. விசுவாசமென்னும் வரம் பிலேயாமிற்கு இருந்தது. அதை அவன் தேவனுடைய பரிபூரண மூலவார்த்தையினிடம் உபயோகித்தி ருக்கலாம். இன்றைக்கு தேவ ஊழியத்தில் காணப்படும் அநேகரும் அவ்விதமே தெய்வீக சுகமாக்குதலை உபயோகிக்கக் கூடும். அநேக ஜனங்கள் அந்நிய பாஷை, தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற வரங்களை தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று உபயோகிக்கலாம். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்வதில்லை; இருந்தாலும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார். தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தை தங்கள் உலகப் புகழுக்காகவும், இன்பங்களுக்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் உபயோகிக்கின்றார்கள். ஏசாவும், பிலேயாமும் தங்கள் புத்திர சுவீகாரத்தை விற்றுப்போட்டது போல், இவர்களும் தங்கள் புத்திர சுவீகாரத்தை ஸ்தாபனங்களுக்கு விற்றுப்போடுகிறார்கள். பாருங்கள்? அனேகர் அதே காரியங்களை இன்றும் செய்கின்றனர். அது உண்மையென்று நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தங்கள் புத்திர சுவிகாரத்தை ஸ்தாபனங் களோடு விற்றுப் போடுகின்றனர். பெண்கள் குறைந்த ஆடைகளை அணிந்தவர்களாய், தங்கள் மயிரை கத்தரித்தவர்களாய், முகத்தில் வர்ணங்களைப் பூசினவர்களாய் பிரசங்கப் பீடங்களில் ஏறி நின்று பரிசுத்த ஆவியைக் குறித்து பிரசங்கிக்க ஆண்கள் அனுமதிக்கிறார்கள்; இது சபையிலே காணப்படும் மிகப் பெரிய இடறலாம். 168. அரசாங்க வல்லமைகளை குறித்தும், இராஜ்ஜியத்தைக் குறித்தும் நீ அறிய வேண்டுமானால், இஸ்ரவேலர் நாட்டை கவனித் துப்பார். இராஜ்ஜியங்களின் நிலைமைகளை நீ அறிய வேண்டுமானால் இஸ்ரவேல் ஜனங்களை கவனித்துப்பார். அதே போன்று இன்றைய சபை களின் நிலைமையை நீ அறிய வேண்டுமானால் பெண்களை கவனித் துப்பார். ஏனெனில் பெண்கள் சபைக்கு பிரதிபலிப்பாய் காணப்படுகின் றார்கள். பெண்கள் மத்தியில் அசுத்தத்தை நீ காணும்போது சபையின் மத்தியிலும் அதையே காண்பாய். யேசபேலைப் போன்று முகத்தில் வர்ணத்தை தீட்டுவார்களானால், சபையின் நிலையும் அவ்விதமே இருக்கும் என்பதைப் பார். இதை நீ அறிந்திருக்கிறாயா? ஸ்திரீயானவள் சபையாயிருக்கிறாள். 169. கவனியுங்கள், 'நீ போக வேண்டாம்' என்ற தேவனுடைய வார்த்தையாகிய சத்திய தீர்மானத்தை பிலேயாம் கேட்டபின்பும், ஆம் தேவன் அவனுடைய இருதயத்தின் ஆழத்தை அறிந்தவராய், தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தில் அவன் போக அனுமதித்தார். 170. நீயும்கூட அவ்விதம் காணப்படலாம். நீ சத்தியத்தில் நடக்க மனதில்லாதிருந்தும் நீ வெளியே சென்று ஒரு பெரிய ஊழியத்தை செய்யலாம். நிச்சயமாக இவ்விதம் நீ செய்யலாம். ஆனால் நீ அவருடைய வார்த்தைக்கு அப்பால் சென்று அவரின் அனுமதிக்கும் சித்தத்தில் அதை செய்கின்றாய். உனக்குப் பிலேயாமைப் போல் வெற்றிகளும் கிட்டலாம். ஆனால் பிலேயாம் தேவனுடைய ஜனங்களை சபிக்க முடியவில்லை. ஒவ்வொரு விசையும் அவன் சபிக்கத் துவங்கிய போது அதற்கு மாறாக அவன் ஆசீர்வதித்தான். அவன் தன் வெற்றியை வேறுவிதமாக அடைந்தான். பாலாக்கின் மூலம் இஸ்ரவேல் ஜனங்கள் விபச்சாரத்தில் ஈடுபடச் செய்தான். மோவாபியரை இஸ்ரவேலர் ஜனங்களோடு சம்பந்தங்கலந்து விவாகம் செய்வித்தான். " நாம் எல்லோரும் ஓரே ஜனங்கள்தான், நீங்கள் தொழுது கொள்கின்ற தேவனைத்தான் நாங்களும் தொழுது கொள்கிறோம். உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியிருப்பது போல், எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார், நீங்கள் இடும் அதே பலியைத் தான் நாங்களும் இடுகிறோம், ஆகவே, ஏன் எங்களோடு வந்து ஒருமித்து ஐக்கியமாயிருக்க கூடாது?'' என்று பாலாக் கூறினான். "அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது? அவர்களோடு சம் பந்தம் கலக்க வேண்டாம் என்றும், அங்கிருந்து வெளியே வந்து அசுத்த மானதை தொடாதிருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்று கொள் வேன்” என்று வேதம் கூறுகின்றது. அதுதான் உண்மை . அவர்களு டைய அருவருப்பு தேவ வார்த்தைக்கு விரோதமாயிருக்கின்றது. ஆகவே, அதற்கு செவி கொடாமலும் அதனோடு பங்கேற்காமலும் இருங்கள். 171. பிலேயாமினால் உபதேசிக்கப்பட்ட பாலாக்ராஜா இஸ்ர வேல் ஜனங்கள் விபசாரத்தினால் விழுந்துபோகும்படி செய்தான். அதனால் கர்த்தர் ஜனங்களை வாதையினால் வாதித்ததினால் ஓரே நாளில் 24000 பேர் மரித்து போனார்கள். இஸ்ரவேல் புத்திராகிய சபையார் அனைவரும் ஆசாரிப்பு கூடார வாசலிலுக்கு முன்பாக அழுது கொண்டு நிற்கையில், இஸ்ரவேலின் புத்திரரில் ஒருவன் மீதியானிய ஸ்தாபனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து வந்து தன் கூடாரத்தில் விபசாரம் செய்தான். அப்பொழுது ஆசாரியனின் குமாரன் ஒரு ஈட்டியை எடுத்து அதினால் இருவரையும் கொன்று போட்டான். அதினிமித்தம் வாதையானது நின்றது. இது வேதாகமத்தில் காணப்படுகிறதல்லவா?. 172. இங்கு நடந்ததென்ன? பிலேயாம் இஸ்ரவேலரை பலவீனப் படுத்துவதில் வெற்றிக் கண்டான். முழு இஸ்ரவேல் புத்திரரின் பாளை யத்தையே அவன் பலவீனப்படுத்தி அசுத்தப்படுத்தினான். ஒரு உபதேசம் தோன்றி அது வேதத்தை சார்ந்தில்லையென்றால் அவ்விதமே முழு சபையையும் கறைப்படுத்தி விடுகின்றது. கோராகை போன்று சிலர் எழும்பி ஒரு வித்தியாசமான உபதேசத்தைக் கொண்டு வரும் போது அது இஸ்ரவேலர் பாளையத்தை அசுத்தமாக்கினது போன்று இன் றைக்கும் அவ்விதமே முழு சபையாகிய பாளையத்தையும் தவறான உப தேசங்கள் அசுசிப்படுத்திவிட்டன. அதுதான் உண்மை . 173. காதேஸ்-பர்னேயாவில் இஸ்ரவேலருக்கு வார்த்தையின் பரீட்சை கொடுக்கப்பட்டது. அங்கு அவர்கள் பலவீனப்பட்டு போனார் கள். நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள், இஸ்ரவேலர் தேவதூதரின் ஆகாரத்தை உண்டார்கள்; ஒவ்வொரு இரவும் தேவ வார்த்தை அவர்க ளுக்கு வெளிப்பட்டது; ஞானக்கன்மலையின் தண்ணீரை குடித்தார்கள்; அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டார்கள்; தீர்க்கதரிசியாகிய மோசேயையும் அவனுடைய தீர்க்கதரிசனங்களையும் கேட்டார்கள். இருந் தாலும் முடிவில் ஒரு தவறான போதகனை தங்கள் மத்தியில் அனுமதித் தனர். அவன் அவர்களை பலவீனப்படுத்தி, அதினால் அவன் செழிப் படைந்தான். ஒருவன் ஒரு தீர்க்கதரிசியாகவேயிருந்து, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களைக் கட்டலாம்; பெரியப் பெரிய ஸ்தாபனங் களையுடையவனாயிருக்கலாம்; பல லட்ச ஜனங்களை அங்கத்தினர்களாக கொண்டிருக்கலாம். அது எல்லாம் நல்லதுதான். ஆனால் அது தேவனு டைய வார்த்தையோடு ஒவ்வாதவரை அதனுடன் எந்த பங்கையும் நீ ஏற்காதே; அதை விட்டு விலகி இரு, தேவன் ஒரு போதும் தம் சிந்தையை மாற்றிக் கொள்வதில்லை. முடிவில் வெளிப்படுவது தேவனுடைய வார்த்தைதான், வார்த்தை மட்டுமே. தேவனுடைய வார்த்தையோடு ஒன்றை கூட்டினாலும், ஒன்றை எடுத்துப் போட்டாலும் தேவனுடைய வாதை நிச்சயம்'' 174. இங்கு சற்று கூர்ந்து கவனியுங்கள். இஸ்ரவேலர் தங்க ளுடைய மிகப் பெரிய பலசாலியான அமலேக்கியரை வேவு பார்த்து திரும்பின பொழுது, தேவ வார்த்தையின் பரீட்சை அவர்களுக்கு கொடுக் கப்பட்டது. வேவுப் பார்த்தவர்கள், "அமலேக்கியரின் மதில் சுவர்கள் இரண்டு ரதங்கள் ஒருமிக்க ஓடும் அளவுக்கு அகலமாயுள்ளதென்றும், அவர்கள் ஈட்டிகள் மிக நீளமாயுள்ளனவென்றும் அவர்கள் ராட்சத ஜனங்கள், அவர்களின் பார்வைக்கு முன்பாக நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்'' என்று கூறினர். ஆனால் யோசுவாவும் காலேபும் அவர்கள் மத்தியில் நின்று, "இரண்டு லட்சம் புருஷரே சற்று பொறுங்கள். நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்'' என்றார்கள். எதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் அப்படி சொன்னார்கள்? ''நான் அந்த தேசத்தை உங்களுக்கு சுதந்தரமாக கொடுத்தேன், அது உங்களு டையது'' என்று தேவனுடைய வாக்குத்தத்தத்தைதான் அவர்கள் சார்ந்தி ருந்தார்கள். ஆனால், ஜனங்களோ, அந்நிய ஜனங்களோடு சம்பந்தங் கலந்து, விபச்சாரம் செய்து பலவீனராகி அவர்களுடைய ஆராதனை பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டனர். எப்பக்கம் திரும்ப வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அறியாமற் போயினர். அதுதான் உண்மை. அங்குதான் அவர்களுக்கு வார்த்தையின் பரிசோதனையுண் டானது. 175. உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்து தேவன் தம்மு டைய அனுமதிக்கும் சித்தத்தை உனக்கு அளிக்கிறார், ''நல்லது சகோ. பிரான்ஹாமே, நான் அவ்விதம் தான் செய்கிறேன், அது என்னை பாதிப் பதில்லை. கர்த்தர் என்னை தினமும் ஆசீர்வதிக்கிறார், நான் ஆவியில் பாடி நடனமாடுகிறேன்'' என்று நீ கூறலாம். அவர் அவ்விதம் அனுமதிப் பார். நீ தொடர்ந்து செய். ஆனால் முடிவில் என்ன செய்யப்போகிறாய்? 176. ''நான் குறைவுள்ள ஆடைகளைத்தான் அணிகிறேன், அது ஒருபோதும் என்னை பாதிப்பதில்லை, என்னுடைய விசுவாசம் என் ஆடையிலில்லை, கிறிஸ்துவில்தான் உள்ளது'' என்று நீ கூறலாம். ஆனால் வேதம் ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை நீ கவனிக்க வில்லையா? இதைக் குறித்து நீ என்ன செய்யப் போகிறாய்? பிலேயாம் இடறல் உண்டாக்கினது போல் நீயும் அனேக பெண்களுக்கு முன்பாக இடறலைப் போடுகிறாய். உனக்குள்ள பெண்பிள்ளைகளை என்ன செய்யப் போகிறாய்? ஒரு ரிக்கிகள் குழுவை (Rickettes) யேசபேலைப் போல முகத்தில் சாயம் தீட்டின ஒரு சிறு கூட்டத்தை உன் குடும்பமாக அடையப் போகிறாய். 177. இருந்தாலும் தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார். "பின் ஏன் என்னை அவர் ஆசீர்வதிக்கிறார்” என்று கேட்கலாம். அதை நான் சந்தேகிக்கவில்லை. அவர் பிலேயாமைக் கூட ஆசீர்வதித்தார். பாருங்கள்? நீ அவரின் பரிபூரண சித்தத்தில் நடக்காமல், அனுமதிக்கும் சித்தத்தில் நடக்கிறாய். அவர் உன்னை ஆசீர்வதிப்பதினால், தேவன் தம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்கிறாரா? இல்லை. 40 வருடங்களாக அவர் இஸ்ரவேலரை ஆசீர்வதித்தார். அவர்கள் என்ன செய்தார்கள்? விவாகம் செய்தார்கள்; பிள்ளைகளைப் பெற்றார்கள்; தசமபாகம் செலுத்தினார்கள். வனாந்திரத்தில் தேவன் அவர்களை மன்னாவினால் ஆசீர்வதித்தார்; ஆனாலும் அவர்கள் எல்லோரும் அழிந்துபோனார்கள். ஏனெனில், அவர்கள் தேவனுடைய மூல உபதேச சட்டத்தை ஒருபோதும் கைக் கொள்ளவில்லை. 178. "தொடர்ந்து உன் இருதயத்தின்படி செய்''. ஆனால் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள், அவர்கள் காதேஷ் - பர்னேயாவை விட்டு அப்பால் பிராயணம் செய்யவில்லை. இரண்டே நாட்களில் அவர்கள் கானானுக்கு சென்றிருக்கக்கூடும். மாறாக அவர்கள் 40 வருடம் வனாந்திரத்தில் (மூல உபதேசத்தில் உறுதியாய் நின்ற யோசுவாவையும், காலேபையும் தவிர) அவர்களின் ஒவ்வொருவரும் அழிந்து போகு மளவும் சுற்றி சுற்றி நடந்தார்கள். 179. ஓ. தேவன் நமக்கு உதவி செய்யட்டும்! தேவன் தமது சித்தத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை. ஆனாலும் அவர் உன்னை ஆசீர்வதிக்கிறார். அவர் பிலேயாமை ஆசீர்வதித்தார். ஆனால் அவன் அங்கு என்ன செய்தான்? முழு இஸ்ரவேல் பாளையத்தையுமே அசுத் தப்படுத்திவிட்டான் பாருங்கள். கர்த்தர் என்ன கூறினாரோ அதில் நிலைத்திரு. ஏனெனில் அவர் அதினின்று ஒரு போதும் மாறுவதில்லை. 180. இன்றைய ஊழியத்தில் உள்ள பிலேயாம்களை நோக்கிப் பாருங்கள், அவர்கள் செழித்திருக்கிறார்கள்; பலவித தேவ வரங்களை தங்கள் சுய ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்க ளுடைய கறைபிடித்த உபதேசத்தினால் முழு தேவனுடைய சபையையும் கெடுத்துப் போடுகிறார்கள். ஒருவர் என்னிடம், ''இதை எதற்காக செய்கிறீர்? அதை எதற்காக செய்கிறீர்?'' என்று கேட்டார். "அவைகள் சத்தியம் என்று நீர் விசுவாசிப்பதில்லையா?'' என்று நான் கேட்டேன். 181. "ஓ. சரிதான். ஆனால் அது உங்களுக்கடுத்த விவகார மல்ல. உங்களுடைய கடமை வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதுதான். ''உங்களை ஒரு தீர்க்கதரிசியென்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். நீங்கள் ஆண்களும் பெண்களும் இப்படி, அப்படி செய்யலாம் என்று போதிக்கலாம் அல்லவா'' என்று கூறினார். அடிப்படையான ஏ, பி, சி, (A,B,C) சிறு சிறு காரியங்களையே அவர்கள் கற்றுக் கொள்ள இயலாமல் இருக்கும்போது ஆவிக்குரிய பெரிய காரியங்களை அவர்களால் எவ்விதம் கற்றுக் கொள்ளக் கூடும்? நீ எங்கு ஆரம்பித்தாயோ அதற்கு திரும்பி வர வேண்டும். எல்லா தேவனுடைய வார்த்தைக்கும் திரும்பி வரவேண்டும். 182. இன்றைய நிலைமையை கவனித்துப்பாருங்கள். பிலேயாம் ஒரு வேசியை இஸ்ரவேல் சபைக்கு கலியாணம் செய்தது போல் இன்றைக்குரிய போதகர்களும் உன்னிடம் அவ்விதமே போதிக்க முற்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஸ்தாபனத்தையையும் அதிலுள்ள ஜனங்களையும் வெளிப்படுத்தின விசேஷத்தின் 17ம் அதிகாரத்திலுள்ள பழைய வேசியுடன் கலியாணம் செய்து வைக்கப்போகிறார்கள். திரும்ப வும் பிலேயாமின் உபதேசம்; ''நாம் எல்லோரும் ஓரே இனம் தான், கிறிஸ்தவர்கள்தான்'' என்று கூறப் போகிறார்கள். போப்புகளோடும், எல்லா அத்தியட்சகர்களோடும் அவர்கள் இணக்கமாகிப் போகப் போகிறார்கள். 183. எல்லா ஸ்தாபனங்களும் பெந்தேகோஸ்தேகாரர்களும் கூட இப்பொழுது அப்பம் பிட்கும் ஆராதனையிலும் வட்டமான "கோஷேரை'' (கத்தோலிக்கரைப் போன்று) அப்பத்தை பரிமாறுகின்றார்கள். அது "அஸ்ரோத்து” என்ற சந்திரக் கடவுளைக் குறிக்கும். ஒரு பெந்தேகோஸ்தே போதகர், "அவ்விதமான அப்பத்தை புசிப்பதற்கு உன் மனசாட்சிக்கு உறுத்தலாய் இருக்குமானால், உன் கண்களை மூடிக்கொண்டு சாப் பிட்டுவிடு'' என்று கூறினார். உன் கண்களை மூடிக்கொள்வதா? ஒரு வட்டமான அப்பமா? அது எதைக் குறிக்கிறது? நாம் கர்த்தருடைய பிட்கப்பட்ட சரீரத்தையன்றோ புசிக்கிறோம்? இயேசு கிறிஸ்து நொறுக்கப் பட்டார். வட்டவடிவமான சந்திரக் கடவுளைப் போலல்ல - "அஸ்தரோத்து''. இந்த சந்திரக் கடவுளின் பெண்பால்தான் மரியாளாக சந்திரத் தேவதையான ரோமன் கோஷர் இன்று வைக்கப்பட்டுள்ளது. சந்திர தேவதை. ஓ! நமக்கு ஒரு கோஷர் உண்டு. அது பிட்கப்பட்ட அப்பம் ஐயா! இது நிச்சயம். ஓ! 184. இந்த பிலேயாம் போதகர்கள் தங்களுடைய தவறான போதகத்தினால் வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள அந்த மகா வேசியோடு சபையைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடைசி நாட்களின் வார்த்தையின் பரிசோதனைக்கு வரும்போது... அதனு டைய பலவீனங்கள் இப்பொழுதே காணத் துவங்கிவிட்டன என்பதை பாருங்கள். 900 வித்தியாசப்பட்ட ஸ்தாபனங்கள், தங்களுக்குள்ளே ஒற்றுமையில்லாதவர்களாய், ஒருவர் ஒரு பக்கமும் மற்றொருவர் மற்றப் பக்கமும் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு ஒற்றுமைக்காக முயற்சிப்பது- தேவனுடைய வார்த்தையின் பேரிலல்லாமலும், தேவ னுடைய மூல உபதேசத்தின் பேரிலல்லாமலும் அரசியல் மூலமாகவும், ஸ்தாபனங்கள் மூலமாகவும் ஒன்றுபடுத்த முனைகின்றனர். தேவன் தமது சிந்தையை மாற்றுவதில்லை; அவர் தம்முடைய வார்த்தையில் நிலைத் திருக்கிறார். ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒரு போதும் ஒழிந்து போதில்லை'' என்று அவர் கூறினார். அது சரி. அவர் தம்முடைய மூல வார்த்தையில் நிலைத்திருக்கிறார். ஓ! என்னே! 185. அவர்கள் அன்று செய்ததைப் போலவே, இன்றும் அவரு டைய வார்த்தைக்கு எதிராக யோசிக்கின்றனர். ஆனால் நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அவர் தம்முடைய வார்த் தையை மாற்றுவதில்லை. ஆகவே நீ அதை விசுவாசிக்கவேண்டும். ஏன்? வானமும் பூமியும் ஒழிந்துபோகும். அவருடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. பாருங்கள்? 186. நீ எங்கு, எதினோடு கலியாணம் செய்து வைக்கப்படப் போகின்றாய் என்பதைப் பார்? அரசியலையும், மற்ற காரியங்களையும் பாருங்கள். அரசியலைக் கொண்டு சபையை அவர்கள் ஒன்று சேர்க்க முயற்சிப்பதைக் கவனியுங்கள். அரசியலைக்கொண்டு நாம் கிறிஸ்து வோடு இணைக்கப்படுவதில்லை. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத் திலேயே நாம் அவரோடு இணைத்து வைக்கப்படுகிறோம். பரிசுத்த ஆவி உன்னுள் இருந்து தேவனுடைய ஒவ்வொரு வார்த்தை யையும் சத்தியம் என்று ஆமோதிப்பதுதான், நீ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய் என்பதற்கு அடையாளமாகும். அது உண்மை ! ஒருவன் இந்த தீர்க்கதரிசனப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், அல்லது அதனுடன் கூட்டினால் ஜீவப் புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். 187. "இருந்தாலும் அவன் செழிக்கின்றானே, ஒருவனுடைய செழிப்பைக் கண்டு நீர் அதை நம்பவில்லையா?'' என்று கேட்கலாம், செழிப்பைக் கொண்டு தேவனை நீ நிதானிக்கமுடியாது. உலகம் செழிக்கின்றது, பிலேயாம் செழித்திருந்தான். சகோதரனே, தேவனை அவருடைய வார்த்தையில் தான் நிதானிக்க வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறார். அதை சத்தியம் என்று விளங்கப் பண்ணுகின்றார். ஆகவே நண்பனே, தேவன் தம் சிந்தையை மாற்றுவதில்லை என்று உன் வாழ்நாளெல்லாம் மறந்துபோகாதே; இருந்தாலும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். அவர் உன்னை தமது அனுமதிக்கும் சித்தத்தில் போகவிட்டாலும் தம்முடைய சிந்தையை மாற்றுவதில்லை என்று உன் வாழ்நாளெல்லாம் மறந்து போகாதே; அவர் உன்னை தமது அனுமதிக்கும் சித்தத்தில் போகவிட்டாலும், தம்முடைய சிந்தையை மாற்றுவதில்லை. அவர் தம்முடைய திட்டத்தையும் மாற்று வதில்லை. உனக்காக தம்முடைய வார்ததையையும் மாற்றுவதில்லை. இல்லை, ஐயா. நீதான் மாற வேண்டும். உன்னுடைய அனுபவத்திற்கு தேவ னுடைய வார்த்தையை மாற்றாதே. தேவனுடைய வார்த்தைக்கு சரியாக உன் அனுபவம் அமையட்டும். பாருங்கள்? நி அதன்படியே ''நல்லது, நான் ஒரு நல்ல மனிதன். தேவன் இதை, அதை அல்லது மற்றொன்றை செய்கிறார், என்று கூறலாம். “ஆனால் நீ அவருடைய வார்த்தையைக் கைக் கொள்கிறாயா?'' "ஓ, நல்லது. நான் உனக்குக் சொல்கிறேன். அதெல்லாம் வெறும்...'' என்பாயாகில்... எங்கேயோ தவறு உள்ளது. அது உண்மை . தேவன் உன்னை... ஆம், அவர் உன்னைச் செழிக்கச் செய்வார். நிச்சயமாக, அவர் உனக்கு... 188. யாரும் அடைந்திராவண்ணம் ஸ்தாபனங்கள் செழித்துள் ளன. அவர்கள் தங்கள் கூடாரங்களையும், அருமையான ஆலயங்களை யும் இத்தேசம் எங்கிலும், எல்லாவற்றிலும் பரப்புகின்றனர். அவர்கள் ஐசுவரியவான்களாய் உள்ளனர். எல்லா இடங்களிலுமிருந்து அவர் களுக்கு செல்வம் குவிகின்றது. அங்கத்தினர் பெருகுகின்றனர். ஆனால் வேதமோ, ''உலகத்தின் எல்லா ஐசுவரியமும், மனிதரின் ஆத்துமாக் களும் அவளிடத்தில் காணப்பட்டன,'' என்று கூறவில்லையா? அரசியலுக்கும், ஸ்தாபனத்திற்கும் தாயாகிய இந்த மூத்த வேசியினிடத் தில் சகலமும் காணப்பட்டன என்று வேதம் கூறவில்லையா? 189, ஆனால் தேவனுடைய சிறுகூட்டம் அவருடைய வார்த் தையில் மையங் கொண்டிருக்கும் மணவாட்டியாகும். பரலோகத்தின் தேவன் தாமே உன்னை தமது வார்த்தையில் நிலைக்கப் பண்ணுவராக. அந்த வார்த்தையைவிட்டு ஒருபோதும் அசையாதே. தேவன் உன்னு டைய வியாதியை சொஸ்தப்படுத்தியிருக்கலாம். உன்னுடைய குழந்தை, உன்னுடைய கணவன், உன் மனைவி, உன், தாயார் அல்லது யார் யாரையாகிலும் சொஸ்தப்படுத்தலாம். நீ ஒருவேளை ஆவியில் நிறைந்து மேலும் கீழும் குதித்து நடனமாடலாம், ஒரு காரியத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். மழையானது நீதிமான்கள் மேலும், துன்மார்க்கர் மேலும் பொழிகின்றது. வித்துக்கள் அங்கே படுத்திருக் கின்றன. ஒரு வேளை அது முன்குறிக்கப்பட்டிருக்கலாம் அல்லது முன் குறிக்கப்படாமலிருக்கலாம். ஆனால் முன்குறிக்கப்பட்டிருந்ததேயானால் அதுதான் காரியம். அது கோதுமையானால், கோதுமையைப் பிறப் பிக்கும். அது தேவனுடைய வார்த்தையானால், தேவனுடைய வார்த்தை யைத்தான் அது பிறப்பிக்க வேண்டும். அல்லவென்றால், அது முன்குறிக் கப்படவில்லை. இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 190. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒன்பது மணிக்கு முடித்து விடுவதாக நான் கூறியிருந்தேன், இப்பொழுது 10 மணியாக இன்னும் 20 நிமிடங்கள் உள்ளன. அநேகர் நீண்ட தூரம் செல்ல வேண்டும். உங்களை இவ்வளவு நேரம் இருக்கவைப்பது, உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ள அல்ல, ஏனெனில் நான் உங்களை நேசிப்ப தால் தான். எனக்குத் தெரிந்ததையெல்லாம் மறைத்து வைக்கவில்லை; நான் உங்களுக்கு சத்தியத்தையே எடுத்துரைக்கின்றேன். 191. வெளியில் நான் சென்று பங்கு பெறும் கூட்டங்களில் இப்படிப்பட்ட செய்திகளை நீங்கள் கேட்டிருக்கவே முடியாது. இல்லை. நான் இந்த கூடாரத்திற்கு வருவதாக உங்களுக்கு வாக்களித்தேன். சரியாக இங்கே இருந்துதான் நான் செய்திகளைப் பிரசங்கிக்கிறேன். தேவன் எனக்கு அருளிய மூன்று அல்லது நான்கு செய்திகள் இன்னும் உள்ளன, அதற்கான வேத வசனங்களை நான் வைத்துள்ளேன். இங்கு பிரசங்கம் செய்வதைப் போல வெளியில் சென்று முயற்சி செய்ய இயலவில்லை. இங்கிருந்துதான் தேவனுடைய வார்த்தை புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது. கர்த்தர் இதை மாற்றுகின்ற வரையில் நான் இங்கேயே இருந்து, எல்லாவற்றையும் வெளிகொணருவேன். அது சரி. வெளியில் நடைபெறும் கூட்டங்களில், நான் வியாதியஸ்தர்க ளுக்காக ஜெபித்து, ஆடுகள், கேட்கின்ற வகையில் காரியங்களை சற்று சுற்றி வளைத்து கூறுவேன். என்ன கூறப்படுகின்றது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். வேறுவிதமாகக் கூறினால், தூண்டில் முள்ளில் வைக்கப்படும் ஆகாரம் போன்றதாகும். நீங்கள் பாருங்கள், பகுத்தறிதல் போன்ற அடையாளங்களைக் காண்பித்து தேவன் ஜனங்களின் இருதயத்தை அறிந்து இவைகளைச் செய்கிறார் என்று உணர்த்த முற்படு வேன். அது மக்களைத் தூண்டுவதற்கென அமைந்திருக்கும் ஒரு சுவிசேஷ வரமாகும். முதலாவது நடைபெறுவது என்ன தெரியுமா, தங்கள் வீட்டில் ஒரு ஒலி நாடா செல்லும் போது, அது ஒரு செம்மறியாடாக இருந்தால் அதனுடன் சரியாக வந்து விடும். அது ஒரு வெள்ளாடாக இருந்தால், ஒரு நாடாவை வெளியே உதைத்து தள்ளும். ஆஹ்-ஹ.(சகோ. பென் பிரையான்ட் "உங்களையும் கூட'' என்று கூறுகின்றார் - ஆசி) நீங்கள் பாருங்கள் அது... " உங்களையும் கூட'', அது சரி சகோ. பென் அது சரியானதாகும். பென்னுக்கு சில அனுபவங்கள் உண்டு. நல்லது. அது உண்மை . 192. நீங்கள் அவருடையவர்களாய் இருப்பதால் பூரிப்பாய் உள்ளீர்களா? (சபையோர் "ஆமென்” என்கின்றனர்-ஆசி) நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்களா? ("ஆமென்'') நீண்ட நாட்களுக்கு முன்னால் இச்சிறிய பெந்தேகொஸ்தே பாடலை நாங்கள் பாடுவதுண்டு. கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்; அது இயேசுவாயில்லாமல் இருந்தால், நான் எங்கே இருந்திருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஓ, கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்த முதல் மகிழ்ச்சியாயிருக்கிறேன். கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்த முதல் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அது இயேசுவாயில்லாமல் இருந்தால், நான் எங்கே இருந்திருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழச்சி கொள்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்த முதல் நான் சத்திமிட்டுக் கொண்டிருக்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்த முதல் நான் சத்திமிட்டுக் கொண்டிருக்கிறேன்; அது இயேசுவாயில்லாமல் இருந்தால், நான் எங்கே இருந்திருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். மகிமை! நீங்கள் சந்தோஷமாய் உள்ளீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி) நீங்கள் சந்தோஷமாயிருக்கின்றீர்களா... மறுபடியும் பாடுவோம். கர்த்தர் உம்மை வெளியே கொண்டு வந்ததால் மகிழ்வுறுகிறீர்களா?. கர்த்தர் உம்மை வெளியே கொண்டு வந்ததால் மகிழ்வுறுகிறீர்களா? அது இயேசுவாயில்லாமல் இருந்தால், நான் எங்கே இருந்திருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொணர்ந்த முதல் நான் பாடிக் கொண்டிருக்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொணர்ந்த முதல் நான் பாடிக் கொண்டிருக்கிறேன்; அது இயேசுவாயில்லாமல் இருந்தால், நான் எங்கே இருந்திருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அதனால் நீங்கள் மகிழ்ச்சியுறுகிறீர்களா? (சபையோர் 'ஆமென்” என்கின்றனர்-ஆசி) பிறகு, நாம் ஒளியில் நடப்போம். உங்களுக்கு அந்தப் பாடல் தெரியுமா? நாம் ஒளியில் நடப்போம், அது அழகான ஒளி, அதிலிருந்து வரும் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமானவை; இரவிலும், பகலிலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கும், ஓ, இயேசுவே உலகத்தின் ஒளி. அதை நீங்கள் விரும்புகிறீர்களா? நாம் மறுபடியும் பாடுவோம். நாம் ஒளியில் நடப்போம், அது அழகான ஒளி அதிலிருந்து வரும் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமானவை; இரவிலும் பகலிலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கும், ஓ! இயேசுவே அந்த ஒளி. அது சூரிய எழுச்சி! ஒளியின் பரிசுத்தவான்களே பிரசித்தப்படுத்துங்கள், இயேசுவே இவ்வுலகின் ஒளி என்று; இரக்கமும் சத்தியமும் அவர் நாமம், இயேசுவே ஒளி..... இப்பொழுது கரங்களை உயர்த்தி இதைப் பாடுவோம். நாம் ஒளியில் நடப்போம், அது அழகான ஒளி அதிலிருந்து வரும் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமானவை; இரவிலும் பகலிலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கும், ஓ, இயேசுவே அந்த ஒளி. ஒருவொடொருவர் கைகளைக் குலுக்குங்கள். ஓ, அதிலிருந்து வரும் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசனமானவை; நீங்கள் ஒளியின் பிள்ளைகளாய் இருப்பதால் மகிழ்ச்சி கொள்ளு கிறீர்களா? குமாரன் மேலெழும்பி உள்ளார். ............இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் சிறுபிள்ளைகளே, ஒருவரை ஒருவர் நேசியுங்கள் ............ உலகின் ஒளி. ஓ. நாம் ஒளியில் நடப்போம், அது அழகா...... (அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துதல்) அதிலிருந்து வரும் இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசனமானவை, இரவிலும் பகலிலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கம், அது இயேசுவே, உலகத்தின் ஒளி. நீங்களெல்லாரும் விசுவாசிக்கிறீர்களா? நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். ஓ, நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். பாட மறுப்பவர்கள் தேவனை என்றுமே அறியாதவர்கள் ஆனால் பரலோக இராஜாவின் பிள்ளைகளோ ஆனால் பரலோக இராஜாவின் பிள்ளைகளோ தங்கள் மகிழ்ச்சியை மேலே கூறுவார்கள் தங்கள் மகிழ்ச்சியை மேலே கூறுவார்கள். ஏனெனில் நாம் செல்கிறோம்........(மகிமை) அந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். ஓ, நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். 193. உங்கள் கைக்குட்டைகளை வெளியே ஒரு நிமிடம் எடுங் கள். நாம் கர்த்தருக்கு அசைவாட்டும் காணிக்கையை செலுத்தலாம். அது கதிர் அல்ல, ஆனால் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் மற்றவைகளையும் எடுத்தார்கள்! பாருங்கள். ஓ, நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், ஓ, அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். ஓ, நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், ஓ, அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். 194. ஆமென்! ஓ அது உங்களுக்கு நல்லுணர்வைத் தருகிற தல்லவா? பழைய பரிசுத்தவான்களை என்னால் கற்பனைச் செய்து பார்க்க முடிகின்றது. அவர்கள் ரோம விளையாட்டு அரங்கங்களுக்கு கொண்டு செல்லப்படும் முன், அவர்கள் அந்த மலையின் மேல் ஏறி, அந்த சிறிய சிங்க கெபிகளுக்கு செல்லும் போது பாடினார்கள்; ஓ, நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், இந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். சீயோனின் நிலமானது ஆயிரம் பரிசுத்த இனிப்புகளை விளைவிக்கும் பரலோகத்தின் சிங்காசனத்தை நாம் அடையும் முன்னே, பரலோகத்தின் சிங்காசனத்தை நாம் அடையும் முன்னே, நாம் பொன் வீதிகளில் நடப்போம் நாம் பொன்வீதிகளில் நடப்போம். நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். 195. இதை மறுபடியும் கூறுங்கள். தேவனாகிய கர்த்தாவே, (சபையோர் “தேவனாகிய கர்த்தாவே” என்று கூறுகின்றனர் - ஆசி) மறுபடியும் புதிதாக என்னை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். ("மறுபடியும் புதிதாக என்னை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன்'') எல்லா அநீதியான காரியங்களிலிருந்தும் என்னை கழுவியருளும் (''எல்லா அநீதியான காரியங்களிலிருந்தும் என்னைக் கழுவியருளும்”') உம்முடைய வார்த்தை யைக் குறித்த எல்லா சந்தேகத்தையும் என்னிலிருந்து கழுவியருளும். ("உம்முடைய வார்த்தையைக் குறித்த எல்லா சந்தேகத்தையும் என்னி லிருந்து கழுவியருளும்'') இந்த ஈஸ்டர் தினத்திலிருந்து நான் ("இந்த ஈஸ்டர் தினத்திலிருந்து நான்'') கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ('கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக”') புதிய சிருஷ்டியாகட்டும் (புதிய சிருஷ்டியா கட்டும்'') உம்முடைய வார்த்தையை ('உம்முடைய வார்த்தையை'') என் னுடைய இருதயத்தில் நான் சுமக்கட்டும் ('என்னுடைய இருதயத்தில் நான் சுமக்கட்டும்'') என் பாதைக்கு ஒளி தரும் ('' என் பாதைக்கு ஒளி தரும்'') என் பாத விளக்காக அது இருப்பதாக (''என் பாத விளக்காக இருப்பதாக'') இது முதல் ('இது முதல்'') நான் உம்மைப் பின்பற்று வேன். ('நான் உம்மைப் பின்பற்றுவேன்'') இயேசுவின் நாமத்தில். ("இயேசுவின் நாமத்தில்'') ஆமென் ("ஆமென்''). நாம் சீயோனை நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனை மேல் நோக்கிச் செல்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். 196. அது உங்களுக்கு நல்லுணர்வைத் தருகிறதல்லவா? (சபை யோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நம் இருதயத்தில் மரித்திருந்த நாம் உயிராக்கப்பட்டு, உயிர்பிக்கப்பட்டு இருப்பதை அறிந்து நம்மை நாமே மறுபடியும் புதிதாக அவருக்கு அர்ப்பணித்துள்ளோம். இது உங்க ளுக்கு நல்லுணர்வை அளிக்கின்றதல்லவா? ("ஆமென்”') என்னே, ஓ, என்னே! தணியாத அளவிற்கு நான் உங்களை நேசிக்கிறேன். கவனியுங்கள் ''நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூறுவான்?'' பாருங்கள்? ஆதலால், ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். ஒருவருக்கொருவர் ஊழியம் செய்தால் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். அது சரியா? "உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்ட இச்சிறியவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்.'' ''உமக்கு தேவையிருக்கும் போது எப்போது நாங்கள் கண்டோம்? எப்போது நீர் காவலாயிருக்கும் போது உம்மை வந்துக் கண்டோம்.'' "அவர்களுக்கு என்ன செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்.'' 197. அது அற்புதமானதல்லவா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் தானே? ('ஆமென்'') 198. ஓ, உங்களுக்கு இன்னும் ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ளது, நாம் பாடுவதற்கென இன்னுமொரு பாடல் உள்ளது. ஓ அதை எடுங்கள். அது சரி, ஐயா, ஓ, இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல். அதை மறவாதீர்கள் நண்பர்களே. நாம் ஒவ்வொருவரும் திறந்த ஒரே இருதயத்துடனே பாடி, நமக்குள்ள எல்லாவற்றையும் அவரிடத்திற்கு கொண்டு செல்வோம். இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல், வருத்தமும் துன்பமும் மிக்க பிள்ளையே; சந்தோஷம் சமாதானம் அது உனக்களிக்கும், செல்லுமிடமெல்லாம் அதைக் கொண்டுச் செல். விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! இப்புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! | இப்புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமாமே; 199. ஞாபகம் கொள்ளுங்கள், துன்பமிக்க உஷ்ணக் காற்றானது அடிக்கையில், பிசாசானவன் எப்பக்கத்திலிருந்தும் எனக்கு சவாலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் எனக்காக இரவிலும் அல்லது பகலிலும் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைவு கூறுவேன், நானும் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பேன். உங்கள் அருமையான போதகர் நெவிலுடனும், அவருடைய உதவியாளர் சகோ. காப்ஸ் உடனும் தரித்திருங்கள். அவர்க ளுக்கு -செவிகொடுங்கள். ஜீவனுள்ள வார்த்தைகளை அவர்கள் உங்க ளுக்கு போதிப்பார்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். அப்படி நான் விசுவாசிக்கவில்லையெனில் நிச்சயமாகவே அவர்கள் இங்கிருக்க விடமாட்டேன். செய்தியை அவர்கள் விசுவாசித்து தங்களுக்கு தெரிந்த வரையிலும் அதில் நிலைத்திருக்கிறார்கள் என்று நான் விசுவாசித்து, அவர்கள் இருவர் பேரிலும் நம்பிக்கையுடையவனாயுள்ளேன். அவர் களுடன் தரித்திருங்கள். இன்றிரவில் குழுமியிருக்கும் மற்ற சகோ தரர்கள், இவர்கள் எதற்காக இவ்விரவு வந்தார்கள் என்பதைக் கேட்டீர்கள், இவர்கள் எங்கு தங்கள் கூட்டங்களை வைத்திருக்கிறார் களோ, நீங்கள் இவர்கள் அருகில் வசிக்கும் பட்சத்தில் இவர்களோடு தரித்திருங்கள். இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல் ஒவ்வொரு கண்ணியிலும் காக்கும் கேடகமாக (இதைக்கவனி) சோதனை உன்னைச் சூழும் வேளையில் ஜெபத்தோடு அப்பரிசுத்த நாமத்தை சுவாசி. விலையுயர்ந்த நாமம், விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை, ஓ என்ன இனிமை! நிச்சயம்...... அன்புள்ள தேவனே, இம்மக்களைச் சுகப்படுத்தும் இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கின்றேன் பிதாவே, இதையருளும் கர்த்தாவே. ............. ஓ என்ன இனிமை ! இப்புவியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமாமே. நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதப்படியில் நாம் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை தேவன் உன்னோடிருப்பாராக. இப்பொழுது நமது தலைகளை வணங்குவோம் (சகோ. பிரான்ஹாம் தேவன் உன்னோடிருப்பாராக என்ற பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி) ஓ தேவனே, எங்களோடிரும், கர்த்தாவே எங்களுக்கு உதவும். ............ நாம் இயேசுவின் பாதப்படியில் சந்திக்கும் வரை (நாம் சந்திக்கும் வரை) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை தேவன் உன்னோடிருப்பாராக. 200. அது என்னுடைய உண்மையான ஜெபமாயிருக்கும். நாம் மறுபடியும் சந்திக்கும் வரை, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! நம்மு டைய விலையேறப்பெற்ற சகோ. நெவில் இவ்வருமையான கூட்டத்தை முடிக்க அவரை அழைக்கவிருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் நேசிக்கிறார். உங்களைப் போன்ற மக்களைப் பெற்றுள்ளதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக் கிறேன். விசுவாசிப்பதற்கு யாரும் இல்லையெனில் என்னுடைய செய்தி என்னவாயிருக்கும்? அதற்கான மக்கள் இங்குள்ளனர், இச்செய்திக்காக நீங்கள் மரிக்கவும் செய்வீர்கள். தேவன் தாமே உங்கள் ஒவ்வொருக்கும் உதவி செய்வாராக. என் ஜெபம் உங்களோடும் இருக்கும். என் ஆசீர்வாதம் உங்கள் ஒவ்வொருவரோடும் செல்லும். அந்த உயிர்தெழுதலில் ஒவ்வொருவரும் பாகமாக இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையானது இப்பொழுது உங்களுக்குள் இருக்கின்றது. எல்லாம் முடிவு பெற்றது. நீங்கள் தேவனுடைய பிள்ளை. சகோ. நெவில் கூட்டத்தை முடிக்கும் வரை நமது தலைகளை வணங்குவோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.